தொடர் விடுப்பு: 3 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்

தொடர் விடுப்பு மற்றும் அங்கீகாரமற்ற விடுப்பு எடுத்த 3 அரசு மருத்துவர்களை தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) பணி நீக்கம் செய்துள்ளது.

தொடர் விடுப்பு மற்றும் அங்கீகாரமற்ற விடுப்பு எடுத்த 3 அரசு மருத்துவர்களை தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) பணி நீக்கம் செய்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் முதல் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பதவியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல நூறு மருத்துவர்கள் மீதும் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: கடந்த இரண்டு மாதங்களில் 3 அரசு மருத்துவர்களை பதவி நீக்கம் செய்துள்ளோம். 
இந்த மருத்துவர்கள் முறையான விடுப்பு எடுக்காமல், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்தனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை காணப்படும் நிலையில், குறிப்பிட்ட மருத்துவர்கள் பணிக்கும் வராமல் அரசு ஊதியம் மற்றும் பலன்களைப் பெற்று வந்தனர். பல்வேறு கட்ட எச்சரிக்கைக்குப் பின்பும் அவர்கள் பணிக்கு வராததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் 338 மருத்துவர்கள் மீது இதே புகார் வந்துள்ளது. அவர்களின் குற்றமும்
நிரூபிக்கப்பட்டால் புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் லஞ்சம்: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளைக் குடும்பத்தினரிடம் காண்பிப்பதற்கு பணம் வாங்கியதற்காக மூன்று ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் அனுப்பிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி ஒரு செவிலியர் மற்றும் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவிலியரின் ஓய்வூதியம் ஓராண்டுக்கு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பணியாளர்களின் ஊதிய உயர்வு ஓராண்டு தடை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com