கீமோதெரபி கேன்சர் நோயாளிகளின் வரமல்ல, சாபம்! என்கிறாரே இந்த அமெரிக்க மருத்துவர் அது நிஜமா?

கேன்சர் மருத்துவ சிகிச்சை என்பது தற்போது உலகிலுள்ள லாபம் கொழிக்கும் மற்ற வியாபாரத் துறைகளைப் போலவே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
கீமோதெரபி கேன்சர் நோயாளிகளின் வரமல்ல, சாபம்! என்கிறாரே இந்த அமெரிக்க மருத்துவர் அது நிஜமா?

கேன்சர் நோயாளிகளை நோயின் பிடியிலிருந்து காக்கும் வரமாகக் கருதப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு அமெரிக்க மருத்துவர் ஒருவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நோயால் இறப்பதைக் காட்டிலும் கீமோதெரபி சிகிச்சைமுறையால் கடும் அவதிக்குட்பட்டு விரைவில் மரணமடைகிறார்கள் என்கிறார் டாக்டர் ஹார்டின். பி.ஜோன்ஸ்.

கீமோதெரபி  என்பது நச்சு ரசாயணங்களை உடலில் செலுத்தும் முறைதானே தவிர அதன் மூலமாக நோயாளிகளுக்கு கடுமையான வலியாலும், பீதியாலும் துடித்து இறப்பதைத் தவிர எந்தவிதமான பலனும் இல்லை. கீமோதெரபி பரிசளிப்பது வலியையும் மரணத்தையும் என்கிறார் டாக்டர் ஹார்டின். இதை இவர் போகிற போக்கில் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. தனது நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாக கீமோதெரபி சிகிச்சை முறையின் பாதங்கள் என ஒரு ஆய்வுக்கட்டுரையாக முன் வைத்திருக்கிறார்.

கேன்சர் மருத்துவ சிகிச்சை என்பது தற்போது உலகிலுள்ள லாபம் கொழிக்கும் மற்ற வியாபாரத் துறைகளைப் போலவே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் ஆகியோரே இதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நோயாளிகளின் நோய் குணமாவதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளி வழக்கமான கீமோதெரபி சிகிச்சைமுறைக்கு ஒப்புக் கொண்டு கைழுத்திடும் போதும் அது ஒரு லாபக் குறியீடாகவே கருதப்படுகிறது.

பெரும்பாலான சிகிச்சைமுறைகளில் கீமோதெரபி ரசாயணங்கள் உடலுக்குள் இஞ்சக்சன் மூலமாக செலுத்தப்படுகிறது. அல்லது கதிர்வீச்சு முறையில் உடலில் உள்ள கேன்சர் செல்கள் ஊடுருவி அழிக்கப்படுகின்றன. அல்லது கேன்சர் செல்கள் பரவிய உடலுறுப்புகள், உள்ளுறுப்புகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு சிலசமயங்களில் இந்த மூன்று விதமான சிகிச்சைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அப்போதெல்லாம் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பொய் சொல்கிறார்கள், ‘நீங்கள் நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என!’ ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் உங்களது நேரத்தை, வாழ்நாளை கடன்வாங்கி நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். சிகிச்சையின் தாக்கம் முடிந்த பின் மீண்டும் அதே பழைய கடுமையான நோய்த்தாக்குதல் தொடங்குகிறது. முடிவில் மரணமே எஞ்சுகிறது. இதில் சோகத்துக்குரிய விஷயம் நீங்கள் நோயால் இறப்பதைக் காட்டிலும் நோய்க்கான சிகிச்சையால் மிகுந்த வலியுடனும், மோசமான முறையிலும் இறக்க நேரிடுகிறது என்பது தான்.

இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ள டாக்டர் ஹார்டின் ஜோன்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஃபிசிக்ஸ் மற்றும் ஃபிசியாலஜி துறைப்பேராசிரியர் என்பதோடு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிப்பு குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது ஆராய்ச்சியின் முடிவாக அவர் தமது ஆய்வுக் கட்டுரையில் முன் வைப்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கையான கீமோதெரபி சிகிச்சைமுறை கேன்சர் நோயாளிகளின் நோய்த்தீவிரத்தையோ அல்லது மரணத்தையோ எந்தவிதத்திலும் ஒத்திப் போடாது. மொத்தத்தில் அது கதைக்கு ஆகாத சிகிச்சை. அதனால் பலனேதும் இல்லை என்பதே.

அவர் தனது தொடர் ஆராய்ச்சியில் கண்டறிந்ததாகக் கூறுவது கீமோதெரபிக்கு உள்ளாகும் நோயாளிகள் அனைவரும் மிகச் சித்ரவதைப்பட்டே நோயுடன் போராடி உயிரிழக்கின்றனர் என்பதே. தற்போது இவர் இந்த உண்மையைச் சொல்ல முன்வந்தது தினமும் பல பில்லியன் டாலர்கள் புழங்கும் கேன்சர் மருத்துவ வர்த்தகத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டத்தான் என்கிறார்.

கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளாத அல்லது மறுக்கும் கேன்சர் நோயாளிகள், ஒப்புக் கொண்டு கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படும் கேன்சர் நோயாளிகளைக் காட்டிலும் 12 முதல் 12 1/2 வருடங்கள் ஆயுள் நீட்டிப்பு பெறுகிறார்கள். கூடுதலாக கீமோவில் பெறக்கூடிய கடுமையான வலிகளில் இருந்து தப்பிக்கிறார்கள் என டாக்டர் ஹார்டின் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆய்வுக்கட்டுரை நியூயார்க் அகாதெமி ஆஃப் சயின்ஸ் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கீமோதெரபி சிகிச்சைமுறைக்கு ஒப்புக் கொள்ளும் நோயாளிகளில் பலர் குறைந்த பட்சம் சிகிச்சை எடுத்துக் கொண்ட மூன்றாண்டுகளில் இறந்து போகிறார்கள். இன்னும் சிலர் சிகிச்சை எடுத்துக்கொண்ட சில வாரங்களுக்குள்ளாக இறந்து விடுகிறார்கள் எனவும் டாக்டர் ஹார்டின் தமது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கேன்சர் நோயாளிகளில் கீமோவுக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் கீமோவுக்கு ஒப்புக் கொண்ட நோயாளிகளைக் காட்டிலும் உத்தரவாதமாக 4 மடங்கு கூடுதல் வாழ்நாள் நீட்டிப்பைப் பெறுகிறார்கள். இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் மீடியாக்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள முடியாது. அவை எப்போதும் போல விளம்பர வருமானத்திற்காக உலகின் தலைசிறந்த, வலியற்ற அதி நவீன கீமோதெரபி சிகிச்சை குறித்து உங்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கலாம். ஏனெனில் கேன்சர் சிகிச்சைக்கான மருத்துவ வர்த்தகத்தின் இன்றைய ஆண்டு மதிப்பு 130 கோடியில் தொடங்கி 1000 கோடி வரை பெருகி வளர்ந்து கொண்டே செல்கிறது. இதை அறியும் போதாவது வாசிப்பவர்களுக்கு மூளைக்குள் அலார்ம் அடித்தால் சரி.

அமெரிக்க மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஹார்டின் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சிகரமான ஆய்வுக்கட்டுரை முன்வைப்பது கீமோதெரபி கேன்சர் நோயாளிகளின் வரமல்ல சாபம் என்பதே!

கட்டுரையின் நோக்கம் ஹீமோதெரபி குறித்த பயத்தை கேன்சர் நோயாளிகளிடம் உண்டாக்குவது அல்ல. கீமோதெரபியைப் பற்றி நன்கு படித்துப் பட்டம் பெற்றவரான ஒரு மருத்துவப் பேராசிரியர் இப்படி ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதிலிருக்கும் சாதக, பாதகமான வாதங்கள் என்ன? அவர் சொல்வது உண்மையா? எனத் தெரிந்து தெளிவு பெறத்தான்.

அவரது வாதத்தை மறுத்து தமிழக மருத்துவர்கள் கீமோதெரபிக்கு ஆதரவாக அதன் நன்மைகளை விளக்கி மறுப்புக் கட்டுரையோ அல்லது பதிலோ எழுதி அனுப்பினால் தினமணி அதை வெளியிடத் தயாராக இருக்கிறது. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dinamani.readers@gmail.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com