என் ரத்தத்தின் ரத்தமே! சர்வதேச ரத்தம் உறையாமை தினத்தன்று உறைய வைக்கும் சில உண்மைகள் அறிவோம்!

ஏப்ரல் 17-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச உலக ரத்தம் உறையாமை நோய் எனப்படும் ஹீமோபீலியா எனும் நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
என் ரத்தத்தின் ரத்தமே! சர்வதேச ரத்தம் உறையாமை தினத்தன்று உறைய வைக்கும் சில உண்மைகள் அறிவோம்!

ஏப்ரல் 17-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச உலக ரத்தம் உறையாமை நோய் எனப்படும் ஹீமோபீலியா (hemophilia) எனும் நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஹீமோபிலியா என்றால் என்ன?

ஹீமோபிலியா ரத்தத்தில் உறையும் தன்மை குறைபாட்டினால் வரும் ஒரு பரம்பரை குறைபாடு. இது ரத்தம் எளிதில் உறையாத அரிதான ஒரு நோய். ஓருவருக்கு ஹீமோபிலியா இருந்தால், காலில் ஒரு ஆணி குத்தினால் சுவற்றில் இடித்துக் கொண்டால், காயத்தில் ரத்தம் நிற்காமல் வந்துக் கொண்டே இருக்கும். அடிபட்ட இடத்தில், 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோபிலியா இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். ஹீமோபிலியா அதாவது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலமாக வருகிறது.

ஹீமோபிலியா உள்ள மனிதர்களுக்கு ரத்தம் உறையும் திறன் குறைவாக இருக்கும். அல்லது உறையவே உறையாது. இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறு காயங்களினாலோ, அடிபடுவதனாலோ அல்லது தானாகவோ தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படும். ஹீமோபிலியாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் முறையான சிகிச்சையினால் கட்டுப்படுத்த முடியும்.

இது பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். காரணம், ரத்த உறைவுக் காரணி VIII  (8) மற்றும் IX (9) ஐ உற்பத்தி செய்யும் மரபணுக்கள், எக்ஸ் குரோமோசோமில் உள்ளது. எக்ஸ் குரோமோசோம் என்பது ஆணுக்கான குரோமோசோம். இந்த எக்ஸ் குரோமோசோமில் ஃபேக்டர் 8 அல்லது 9-ஐ உற்பத்தி செய்யும் மரபணு இல்லாதிருந்தால், அவர்களுக்கு ஹீமோபிலியா பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களில், மரபணுக் குறைபாடுடைய ஒரு எக்ஸ் குரோமோசோம் இருந்தாலும், மற்றொரு எக்ஸ் குரோமோசோம் இயல்பான உற்பத்திகளைச் செய்வதால், ஹீமோபிலியா பாதிப்பு ஏற்படுவது இல்லை. எனினும், அடுத்தத் தலைமுறைக்கு மரபணுக் குறைபாடுடைய எக்ஸ் குரோமோசோமைக் கடத்துவதால், அவர்களை நோய் கடத்தி என்று அழைக்கிறோம்.’
 
எப்படி கண்டறிவது? 

சில குழந்தைகள் தவழும்போதோ அல்லது நடக்க ஆரம்பிக்கும்போதோ, கை, கால் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நீல நிறத் தழும்புகள் தென்படலாம். பல் விழுந்து முளைக்கும் நேரங்களிலோ அல்லது பல்லைப் பிடுங்க நேரிடும் போதோ, ஈறுகளில் தொடர்ந்து ரத்தக் கசிவு ஏற்படுவது இதற்கான அறிகுறி. தடுப்பூசி போடும்போது வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகலாம். இப்படி ஏதாவது ஓர் அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக ஹீமோபிலியா இருக்கிறதா என்று பரிசோதிப்பது மிகவும் அவசியம்.

அறிகுறிகள்: 

மூட்டுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். அடுத்தடுத்து ஏற்படும் ரத்தக் கசிவு, மூட்டுகளின் உராய்வு இயக்கத்துக்குத் தேவையான திரவத்தை உற்பத்தி செய்யும் சவ்வுகளில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் மூட்டுகளில் வீக்கமும் செயலற்ற தன்மையும் ஏற்படும். தசைகளில் ரத்தக் கசிவு தானாகவும் அல்லது அடிபடுவதாலும் ஏற்படலாம். இவை பல நாட்கள் தொடர்ந்து இருந்தால், தசைகளில் அழுத்தம் உண்டாக்கி, நரம்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிப்படையும்.சிறுநீர், மலத்திலும் ரத்தக் கசிவு தென்படலாம். மூளையில் ரத்தக் கசிவு தானாகவோ, அடிபடுவதாலோ ஏற்படலாம். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் கூடும்.’

‘ரத்தக் கசிவு ஏற்பட்டால், குறைபாடுடைய காரணிகளை நிவர்த்தி செய்வதுதான் சரியான சிகிச்சை. காரணிகள் இல்லாத நேரத்தில், புதிய முழுமையான ரத்தம், புதிய உறைந்த நிணநீர், கிரையோ போன்றவற்றைப் பயன்படுத்தலாம். 

தவிர்ப்பது எப்படி?

‘நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்யக் கூடாது. வழிவழியாக வரும் பல மரபு நோய்களில் ஹீமோபிலியா முக்கியமானது என்பதால், நெருங்கிய உறவுகளுக்கு இடையேயான திருமணத்தைத் தடுக்க வேண்டும்.  அதேபோல் ஹீமோபிலியா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பெண் கருவுற்றால், 11-14 வாரங்களில்  பிரத்யேகப் பரிசோதனை செய்ய வேண்டும். வைட்டமின் C மற்றும் வைட்டமின் K  நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

செல்பேசி - 9498098786
வாட்ஸ் அப் 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com