உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதைப் படியுங்கள் முதலில்!

உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதைப் படியுங்கள் முதலில்!

முகத்தின் அழகை வெளிப்படுத்துவது சிரிப்புதான். நீங்கள் பேரழகு கொண்டிருந்தாலும்

முகத்தின் அழகை வெளிப்படுத்துவது சிரிப்புதான். நீங்கள் பேரழகு கொண்டிருந்தாலும் முகத்தில் சிரிப்பில்லை என்றால் அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. சிலர் சிரிக்க தயங்குவதற்குக் காரணம் அவர்கள் பற்களின் நிறம். இது ஒரு சிறிய பிரச்னை தான். பற்கள் கறை படிந்தும், மஞ்சளாகவும் இருப்பதற்குப் பாரம்பரிய காரணங்களுடன், அடிக்கடி தேநீர், காபி அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றாலும் வரும். இதற்காக சிலர் அடிக்கடி பல் மருந்துவரிடம் பிளீச் செய்து சுத்தமாக்கி கொள்வார்கள். அது கேடு விளைவிக்க கூடியது. மஞ்சள் கறையினை நீக்க பல இயற்கை வழிகள் உள்ளன. 

  • எலுமிச்சை சாருடன் உப்புக் கலந்து பற்களை சில நிமிடங்கள் தேய்த்து வந்தால் நல்லது. பின் குளிர் நீரில் நன்கு கொப்பளித்தால் கறை போய்விடும் 
  • தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டு வந்தாலும் கறைகள் நீங்கும்.
  • உப்பை அதிகம் பயன்படுத்தாமல், சாதாரண சுத்த சாம்பலைக் கொண்டு  வாரம் ஒருமுறை தேய்த்தாலும் கறைகள் நீங்கும்
  • ஆரஞ்சுப்பழத் தோலைக் கொண்டு இரவில் பல் தேய்த்தால் கறைகள் நீங்கும்.
  • சாதாரண டூத் பேஸ்ட் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். ரெண்டு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு சில சொட்டுகள் என இவற்றை கலந்து உங்கள் டூத் ப்ரஷ்ஷில் வைத்து 5 நிமிடம் மென்மையாக பல் துலக்குங்கள். தினமும் இப்படி தொடர்ந்து செய்து வர, மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச் அழகு பெறும்.
  • மஞ்சள் பொடி, தேங்காய் எண்ணெய் கலந்து டூத் ப்ரஷ்ஷில் 5 நிமிடம் தேய்த்தபின் வழக்கமான பேஸ்ட்டால் மீண்டும் ஒரு முறை துலக்குங்கள். பலன் கண்கூடாகத் தெரியும்.
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிதளவு நீர் விட்டு நன்றாக குழைக்கவும். இதனை வழக்கமான டூத் ப்ரஷ்ஷை பயன்படுத்தாமல் பேபி ப்ரஷ்ஷால் மென்மையாக பற்களை துலக்குங்கள். வாரம் ஒரு முறை செய்தால் கூட போதும்.
  • கரிப்பொடியை சிறிதளவு எடுத்து அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போலச் செய்து, ப்ரஷ் செய்யுங்கள். நாக்கு, பற்கள் என கருப்பாகிவிடும், பரவாயில்லை தினமும் இதில் பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.
  • 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சிறிதளவு டூத் பேஸ்ட், அரை மூடி எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கலக்கவும். அலுமினிய ஃபாயில் பேப்பரை பற்களின் அளவுக்கு கத்தரித்து அதில் இந்த பேஸ்டை ஊற்றி அப்படியே பற்களில் வைத்து மூடவும். பத்து நிமிடங்கள் கழித்து மிச்சமிருக்கும் பேஸ்டால் டூத் ப்ரஷ் பயன்படுத்தி பற்களை நன்றாக துலக்குங்கள். இது பற்காறைகளை அகற்றி பற்களின் படிந்துள்ள அனைத்துவித கறைகளையும் நீக்கிவிடும். 
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com