காலையில் எழுந்தவுடன் தொடர்ந்து தும்முகிறீர்களா? இதோ தீர்வு!

எண்ணெய் பசை கட்டாயம் ஒரு மனிதனுக்குத் தேவை. உடம்பின் அடிப்படை ஆதாரம் எலும்பும்
காலையில் எழுந்தவுடன் தொடர்ந்து தும்முகிறீர்களா? இதோ தீர்வு!

அறிகுறிகள் : எண்ணெய் பசை கட்டாயம் ஒரு மனிதனுக்குத் தேவை. உடம்பின் அடிப்படை ஆதாரம் எலும்பும், எலும்பு மஜ்ஜையும் தான். இதில் தான் நமது ஊட்டச்சத்துக்கள் சேமிக்கப் படுகின்றன. இவற்றில் பற்றாக்குறை ஏற்படும் போது காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தொடர் தும்மல், மூக்கில் அரிப்பு, தடித்த நாக்கு மற்றும் அடிக்கடி உண்டாகும் பல் சொத்தை குறைபாட்டிலிருந்து விடுபட..

மண்டலம் - எலும்பு மண்டலம்
காய் - கொப்பரைத் தேங்காய் .
பஞ்சபூதம் - நெருப்பு
மாதம் - மார்கழி
குணம் - நம்பிக்கை
ராசி / லக்கினம் - தனுசு

சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன 

தீர்வு : முற்றின கொப்பரைத் தேங்காய் அல்லது தேங்காய் (100 கிராம்), வாழைக்காய் (அரைக்காய்) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளை குடித்து வரவும். தினமும் எவ்வளவு தேங்காய் அல்லது கொப்பரைத் தேங்காயை பச்சையாக எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொண்டு வந்தால்  காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தொடர் தும்மல், மூக்கில் அரிப்பு, தடித்த நாக்கு மற்றும் அடிக்கடி உண்டாகும் பல் சொத்தை குறைபாட்டிலிருந்து விடுபட முடியும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com