என் கல்யாண விடியோவைப் பார்க்க ஆசையா? நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ட்ரெய்லர் விடியோ!

அண்மையில் சமந்தா நடிப்பில் வெளிவந்த இரும்புத் திரை மற்றும் நடிகையர் திலகம் ஆகிய

அண்மையில் சமந்தா நடிப்பில் வெளிவந்த இரும்புத் திரை மற்றும் நடிகையர் திலகம் ஆகிய இரண்டு படங்களுமே அவருக்கு ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. தெலுங்கில் அவர் நடித்த ரங்கஸ்தலம் சூப்பர் ஹிட்டானது. 

சமந்தா, பிரபல நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவா கடற்கரையில், பல இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திரத் தம்பதியரின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. 

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. தற்போது திருமண விடியோவிலிருந்து சில க்ளிப்பிங்கிஸை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா. அவரது க்யூட்டான ரியாக்‌ஷன்கள், கொண்டாட்டமான காட்சிகள் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இது வரையில் 1 கோடியே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

விரைவில் முழு விடியோவையும் வெளியிடுவார் சமந்தா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com