ஆண்களே, ஒரு நிமிடம்! உங்கள் தலைமுடி உதிர்கிறதா?

அதிகமான அளவில் எலும்பு முறிவு ஆபத்தை உண்டாக்கும் நோய்க்கு (osteoporosis)
ஆண்களே, ஒரு நிமிடம்! உங்கள் தலைமுடி உதிர்கிறதா?

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எலும்பு முறிவு ஆபத்தை உண்டாக்கும் நோயான ஆஸ்டியோபொராஸிஸ் எனும் நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் என்று தயாரிக்கப்பட்ட மருந்தொன்று தலைமுடி உதிர்வதைத் தடுக்க பயன்படலாம் என்றுஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த மருந்து முடியின் வேர்கள் மீது வியத்தகு தாக்கத்தை செலுத்தி, முடி செழித்து வளர உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. தலைமுடி நீண்டு வளர்வதை தடுக்கும் ஒருவித புரதத்தை இலக்கு வைத்து செயல்பட்டு இந்த மருந்து வழுக்கை விழுவதைத் தடுக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் தலைவர் நாடன் ஹாக்சா கூறுகையில், 'தலைமுடி கொட்டுவது அனைவருக்கும் சகஜம்தான். இந்தப் பிரச்சனையால் பெரிதும் தவிப்பவர்களுக்கு இந்தப் புதிய மருந்து நல்ல பயன் தரும்," என்று கூறியுள்ளார்.

இதுவரை தலைமுடி உதிர்தல் பிரச்னைக்கு தீர்வு காண இரண்டு விதமான மருந்துகளே இருந்துள்ளன. அவை, ஃபினாஸ்டரைட் (Finasteride) (ஆண்களுக்கு மட்டும்), மினோக்ஸிடில் (Minoxidil) ஆண்கள் மற்றும் பெண்களுக்கானது.  மேற்கண்ட இரண்டு மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் அவை எப்போதும் முழுமையாகப் பலன் அளித்ததும் இல்லை.

பி.எல்.ஓ.எஸ் பயாலஜி எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், தலைமுடி மாற்று சிகிச்சை செய்து கொண்ட 40 ஆண்களின் உதிர்ந்த தலைமுடிகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய உறுப்பை உடல் ஏற்றக் கொள்வதற்கான மருந்தாக 1980-களில் பயன்படுத்தப்பட்ட 'சைக்லோஸ்போரைன் ஏ' எனும் மருந்தின் மூலம் தலைமுடி உதிர்வைத் தடுக்க முயன்றனர்.

அது SFRP1 எனும் முடி வேர்களைப் பாதிக்கும் புரதத்தைத் தடுத்தது. ஆனாலும், இந்த மருந்தின் பக்கவிளைவுகளால் அதைப் பயன்படுத்த முடியாமல் போனது. பின்னர் WAY-316606 எனும் மருந்து, அந்தப் புரதத்தைச் சிறப்பாக கட்டுப்படுத்தியது இந்தப் பரிசோதனையில் தெரிய வந்தது. தலைமுடி உதிர்வது எதனால், என்ன செய்வது? இந்த மருந்து பயன்பாட்டுக்கு பாதுகாப்பானதா என்பதை அறிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று நாடன் ஹாக்சா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

'தலைமுடி உதிர்வு மனிதர்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுவதால் இந்த புதிய ஆய்வு மிகவும் முக்கியமானது,’ என்று பிரிட்டன் தோல் சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் செய்தியாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com