டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!

நீரழிவு நோயாளிகளின் மனதைத் திருப்திப் படுத்தும் விதமாக அவர்களது வழக்கமாக டயாபடிக் செருப்புகளுக்குப் பதிலாக தற்போது உலகத்தரமான டிஸைனர் வெரைட்டிகளில் அவர்களுக்கென்றே ஸ்பெஷல் கலெக்ஷன்களை 
டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!

உங்களுக்கு நீரழிவு நோய் இருக்கிறதா? அப்படியானால் அதற்கென பிரத்யேகமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் செருப்புகளையே நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்களா? நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள அந்த செருப்புகளைப் பயன்படுத்தி வந்தாலும் அவற்றின் டிஸைன் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? இதுநாள் வரை வேறு வழியின்றி அந்த செருப்புகளை வேண்டா வெறுப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? இனிமேல் அந்தப் கவலை வேண்டாம். ராயபுரத்திலிருக்கும் நீரழிவு சிறப்பு மருத்துவமனையான M.V.ஹாஸ்பிடல் ஃபார் டயாபடிக்ஸும், மத்திய காலணி தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து நேற்று, வியாழனன்று நீரழிவு நோயாளிகளுக்கான ஸ்பெஷல் டயாபடிக் காலணிகளின் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் கலெக்ஷனைத் திறந்து வைத்துள்ளன.

பொதுவாக மக்கள், அவர்கள் நீரழிவு நோயாளிகளோ அல்லது நார்மலான ஆரோக்யம் கொண்டவர்களோ எவராயினும் சரி தங்களுக்கான செருப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது செளகர்யமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள் அதோடு தங்களிடம் இருக்கும் செருப்புகள் பிறர் அணிந்திருப்பதைக் காட்டிலும் ஏதாவதொரு விதத்தில் சிறந்ததாக தனித்துத் தெரிய வேண்டும் என்றும் விரும்புவார்கள்.

ஒருவர் நீரழிவு நோயாளி என்பதால் மட்டுமே அவருக்கு ஏன் அத்தகைய ஆசைகள் மறுக்கப்பட வேண்டும். அதோடு கூட இப்போது நம் நாட்டில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. ஆகவே நோயாளிகளின் மனதைத் திருப்திப் படுத்தும் விதமாக அவர்களது வழக்கமாக டயாபடிக் செருப்புகளுக்குப் பதிலாக தற்போது உலகத்தரமான டிஸைனர் வெரைட்டிகளில் அவர்களுக்கென்றே ஸ்பெஷல் கலெக்ஷன்களை வெளியிட்டிருக்கிறோம்.

இந்த கலெக்ஷனில் மொத்தம் 25 வெரைட்டிகள் உள்ளன. அதில் 13 வெரைட்டிகளை எக்ஸ்க்ளூசிவ்வாக பெண்களுக்கெனவும் 12 வெரைட்டிகளை எக்ஸ்க்ளூசிவ்வாக ஆண்களுக்கு எனவும் பிரத்யேகமாக தயாரித்து அளித்திருக்கிறோம்.

மத்திய காலணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் பயிலும் 25 மாணவர்கள் இணைந்து புத்தம் புதிய வடிவம், நிறம் மற்றும் கண்கவரும் ஃபேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஸ்பெஷல் டிஸைனர் செருப்புகளை உருவாக்கித் தந்துள்ளனர்.

மிக மென்மையான அடித்தளம் மற்றும் அழகான வெளிப்புறத் தோற்றத்துடன் கூடிய இந்த டிஸைனர் செருப்புகள் நீரழிவு நோயாளிகளை மட்டுமல்ல, அனைத்து விதமான மக்களையும் கவரக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

என மத்திய காலணி தொழில்நுட்ப ஆணையத்தின் இயக்குனர் கே.முரளி தெரிவித்தார்.
 

Image: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com