பிடித்து வைத்த பிள்ளையாரா? சுறு சுறு ஆஞ்சநேயரா? பதிலில் இருக்கிறது இதய நோய் தாக்குதலில் இருந்து தப்ப உதவும் எளிய ஆலோசனைகள்!

மேற்கண்ட தீர்வை கனடியன் கார்டியோ வாஸ்குலர் காங்கிரஸ் ஆய்வுக்குழுவினர் கண்டறியத் துணை புரிந்தது... 63 முதல் 77 வயதுக்குட்பட்ட சுமார் 132 மனிதர்களிடம் அவர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வு தான்.
பிடித்து வைத்த பிள்ளையாரா? சுறு சுறு ஆஞ்சநேயரா? பதிலில் இருக்கிறது இதய நோய் தாக்குதலில் இருந்து தப்ப உதவும் எளிய ஆலோசனைகள்!

சர்வ தேச அளவில் ஆண்டுதோறும் இதயநோய்க்குப் பலியாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதயநோய்களை கட்டுப்படுத்த சர்வதேச மருத்துவர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதயநோய்களுக்குப் பொதுவான காரணமாகக் கருதப்படுவது ஒரே இடத்தில் நெடுநேரம் இடையில் எழுந்துகொள்ள வாய்ப்பின்றி பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் இன்று சர்வ தேச அளவில் பலருக்கு இருப்பதால் அவர்களுக்கு இதய நோயின் தாக்கம் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி ஆடாது, அசையாது எவ்வித இயக்கமும் இல்லாமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிர்பந்தம் இருப்பதால்... பலருக்கும் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கக் கூடிய கலோரிகளை எரித்து அவற்றை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகிறது. இதன் காரணமாக அந்த சத்துக்கள் அனைத்தும் அபிரிமிதமான அளவில் கொழுப்புகளாக மாற்றமடைந்து உடலில் தேங்குகிறது. இதைத் தான் கெட்ட கொழுப்பு என்கிறார்கள். இந்தக் கொழுப்பு அதிக அளவில் இதய வால்வுகளில் படியும் போது இதய வால்வுகளில் அடைப்பு, கொலஸ்ட்ரால் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்க வேண்டுமெனில் இதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும் போதே ஒருவர் அதைக் கண்டறிந்து ... தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தொடங்க வேண்டும். அலுவலகங்களில் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் இருப்பின் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து இடம் மாறி அமர்வதோ, கை, கால்களை அசைப்பதோ அல்லது சின்னதாக ஒரு நடைபயிற்சி மேற்கொள்வதோ என ஏதாவது ஒரு செயலைச் சுறுசுறுப்பாக செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மனித உடலில் இருந்து குறைந்தபட்சம் 770 கலோரி சத்துக்கள் எரிக்கப்பட்டு அந்த சத்துக்கள் ஆற்றலாக மாற்றமடைய வேண்டும் என கனடியன் கார்டியோ வாஸ்குலர் காங்கிரஸ் அமைப்பு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், தினமும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 7 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியோ அல்லது உடலியக்கமோ இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் நித்ய கடமையாகிறது.

மேற்கண்ட தீர்வை கனடியன் கார்டியோ வாஸ்குலர் காங்கிரஸ் ஆய்வுக்குழுவினர் கண்டறியத் துணை புரிந்தது... 63 முதல் 77 வயதுக்குட்பட்ட சுமார் 132 மனிதர்களிடம் அவர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வு தான். 132 பேரிடமும் அவர்கள் ஒவ்வொரு நாளும் உணவின் மூலம் பெறக்கூடிய கலோரிகள் நாளின் முடிவில் அவர்களது உடலில் எப்படிச் சேகரமாகிறது? எப்படிச் செலவழிக்கப் படுகிறது? என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பதிவு செய்யப்பட்டன. நாளொன்றுக்கு சுமார் 22 மணி நேரங்கள் உடலியக்கமற்ற வேலையில் ஆழ்ந்திருக்கும் அவர்களைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து 5 நாட்களுக்குப் பதிவு செய்யப்பட்டன. ஆய்வு முடிவில் அவர்கள் கண்டறிந்த உண்மை... தொடர்ந்து பலமணி நேரங்கள் எந்த அசைவும் இல்லாது வேலைப்பளுவில் மூழ்கி இருப்பவர்களை இதய நோய்கள் அதிகமும் தாக்குகின்றன என்பதைத் தான்.

இந்நிலையைத் தவிர்க்க வேண்டுமெனில் இதயநோய்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிய வேண்டிய அவசியமிருப்பவர்கள் குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 7 நிமிடங்கள் எழுந்து கொண்டு மெலிதாக நடைபயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கெட்ட கொழுப்பு உடலில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. இது இதய நோய்களுக்கான அபாயத்தை குறைக்க உதவும்.

இதயத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள எளிய ஆலோசனைகள் சில...

  1. சத்தான உணவு
  2. உடற்பயிற்சிகள்
  3. மன அழுத்தக் கட்டுப்பாடு
  4. உடல் எடை கட்டுப்பாடு
  5. பற்களின் ஆரோக்யத்தை நிலைநிறுத்தல்
  6. போதுமான தூக்கம்

இந்த 7 விஷயங்களையும் சரிவரப் பின்பற்றினால் போதும் இதயநோய் அபாயங்களில் இருந்து நிச்சயம் தப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com