தாம்பத்தியம் மட்டும் தானா வாழ்க்கை?

சாந்தி மிகுந்த மனவேதனையுடன் என் முன் அமர்ந்திருந்தார். அவரது கணவர் கல்லூரிப்
தாம்பத்தியம் மட்டும் தானா வாழ்க்கை?

சாந்தி மிகுந்த மனவேதனையுடன் என் முன் அமர்ந்திருந்தார். அவரது கணவர் கல்லூரிப் பேராசிரியர். மணவாழ்க்கை இனிக்கவில்லை. ஒரு நாளும் நிம்மதியில்லைல். கணவரைக் கண்டாலே வெறுப்பாக வருகிறது. குழந்தையிடமும் தாயன்பைக் காட்ட முடியவில்லை. குடும்பமே வெறுக்கிறது.

சாந்தியைப் புரிந்து கொண்டு அவரது மனநிலைக்கேற்ப கணவர் நடந்து கொள்வதில்லை. அதனால் சாந்திக்கு கோபம். கணவர் மீதும் எல்லோரின் மீதும் அடக்க முடியாத கோபம் வருகிறது. எதிலும் ஆழ்ந்த பற்று இல்லை. சாந்திக்கு நீண்ட நாட்களாகவே காலை நேரத்தில் கிறுகிறுப்பும் மாலை நேரத்தில் தலையே வெடித்து விடுவது போன்ற தலைவலியும் இருந்து வருகிறது இந்த தலைவலி பின் தலைக்கு பரவிய பின் கடுமையாகிறது. சிந்திக்கவோ படிக்கவோ டிவி பார்க்கவோ முடியாது. தீவிர வாசனை எதுவும் பிடிக்காது. ஓரிரு பற்களில் உள்ள சொத்தைக் காரணமாக வலி, மாலை இரவு நேரங்களிலும் ஆசனவாய் வலி மலங்கழிக்கும் நேரங்களிலும் ஏற்படும். சில சமயங்களில் கிறுகிறுப்பு தலைவலி குமட்டலும் வாந்தியும் இருக்கும்.

சாந்தியை மேலும் புரிந்து கொள்வதற்காக உரையாடினேன்.

உங்கள் கணவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? அவரால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஏதாவது பிரச்னைகள் உண்டா?

இல்லை டாக்டர்! இருந்தாலும் அவர் என்னைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவரிடம் கெட்ட பழக்கவழக்கங்கள் எதுவுமில்லை. பொதுவாக எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடியவர்தான். என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? எங்களுக்கு பெரும்பாலும் பகல் நேரங்களில் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. இரவு வந்துவிட்டால் எல்லா எழவும் வந்துவிடும்.

வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது.

சாந்தி மேலும் கூறினார்.

சில நாட்களில் விடியும் வரை வழக்காடி இருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் முகத்தை பார்க்கவே வெறுப்பாக இருக்கும்.

நான் குறுக்கிட்டேன். ‘உங்கள் தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்.’

சாந்தியின் குரலில் இப்போது மாற்றம் ஏற்பட்டது, ‘எனக்கு ஆரம்பத்திலிருந்தே உடலுறவில் இஷ்டமில்லை. என்னை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை முதல் இரவிலேயே அவரிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு வலி ஏற்படும். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஒரு பையன் பிறந்து மூன்று வயதாகிறது. இன்று வரை அவர் என் மனநிலையை, உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் சரியானதுதானா என்று கேட்டேன். அதற்காக நான் என்ன செய்ய முடியும் டாட்கர்?’

‘சாந்தி நீங்க படித்த பட்டதாரி பெண். உங்கள் கணவரோ பேராசிரியர். உங்களுக்கிடையில் இப்படியொரு பிரச்னை வந்திருக்கவே தேவையில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதும், புரிந்து கொள்வதும் அவசியமில்லையா? கணவனும் மனைவியும் தாம்பத்தியமே இல்லாமல் வெறும் நண்பர்களாய் எவ்வளவு காலம் இருக்க முடியும்? இன்றுள்ள சமுதாயச் சூழ்நிலையில் மனைவி தரும் சுகம் போதாது என்று வேறு பெண்களைத் தேடும் ஆண்களும் இருக்கிறார்கள். பாலியல் பிரச்னைகளால் குடும்பமே சிதறிப் போயிருக்கிறது. ஆனால் உங்கள் கணவரோ வேறெந்த தவறான வழியிலும் போகாமல் உங்களை மாற்றுவதற்குப் போராடுகிறார் என்று தான் தோன்றுகிறது.’

‘உங்களுக்குத் தேவையான பொருட்கள் துணிமணிகள் நகைகள் பணம் எதுவானாலும் மனப்பூர்வமாக கணவரிடம் பெற முடிகிறது’.

‘சிறிய அளவிலான குடும்பம். வீட்டு வேலைக்கும் தனியே வேலையாட்கள் இருக்கிறார்கள்’ என்று இடைமறித்துச் சொன்னார் சாந்தி.

‘இவ்வளவு வாய்ப்பும், வசதிகளும் பெற்றுள்ள நீங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் உங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் பல பிரச்னைகள் தீரும் என்று கருதுகிறேன். வெறும் பிடிவாதங்களால், சக்தியில்லாத வாதங்களால், வாழ்க்கை முழுக்க சண்டைதான் நீடிக்குமே தவிர, சந்தோஷங்கள் ஏற்படாது. உங்கள் குழந்தையின் சிறந்த எதிர்காலத்தை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கலாம். என்னை ஒரு நண்பனை போல நினைத்து என் வார்த்தைகளை பரிசீலியுங்கள். ஒரு மருத்துவராக உங்களுக்கு உதவக்கூடிய மருந்தை தருகிறேன்’ என்று கூறி மருந்தை கொடுத்து அனுப்பினேன்.

பதினைந்து நாட்களில் மீண்டும் வந்த சாந்தி, காலை நேரக் கிறுகிறுப்பு இல்லை என்றும், மாலை நேரத் தலைவலி இரண்டு முறை வந்தது என்றும், சொத்தைப் பல்லில் பலி தெரியவில்லை என்றும் கோபப்படாமல் இருக்க மிகவும் முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். அதையும் மீறி ஒரு நாள் கோபம் வந்து, வாக்கு வாதங்கள் நடந்ததாகவும் ஓரிரு முறை கணவருடன் தாம்பத்தியம் கொண்டதாகவும் ஆனால் அவர் முன்பு போல் கடுமையாக நடந்து கொள்வதில்லை என்றும் தெரியப்படுத்தினார்.

மூன்று  மாத தொடர் சிகிச்சைக்குப் பின்னர் சாந்தியின் செயல்பாடுகளிலும் வார்த்தைகளிலும், நளினமான வித்தியாசத்தைக் காண முடிந்தது. தலைவலி வரவில்லை என்றார். தன் மீது குழந்தையும், கணவரும் முன் எப்போதும் இருந்ததை விட இப்போது அதிகளவு அன்பு காட்டுவதாகச் சொன்னாள். (அவரது வெறுப்பு வேகம் குறைந்து, அன்பும், இனிமையும், மெல்லிய காற்றாய் உருவாகி வீசத் தொடங்கியிருப்பதால், கணவரும், குழந்தையும் சாந்தியை கூடுதலாக நேசிக்கத் துவங்கியுள்ளனர்).

‘தாம்பத்தியத்தில் பிரச்னை எதுவும் உள்ளதா?’ என்று கேட்டேன்.

புது மணப்பெண் போல் வெட்க உணர்வுடன் பார்வையை சற்று கீழே தாழ்த்திப் பார்த்தபடி, ‘இல்லலி டாக்டர்! இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கிறோம். என்னை அறியாமலேயே எனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனக்கும் கூட அந்த விருப்பம் ஏற்படுவதால் கணவரை தேடுகிறது’ என்று கூறினார்.

சாந்தியை முதன் முதலில் சந்தித்தபோது, அல்லது கணவருடன் வாதிட்டதைப் போலவே என்னிடம் கேட்ட கேள்வி, ‘தாம்பத்தியம்’ மட்டும் தானா வாழ்க்கை?

அப்போது அவருக்கு நான் சொன்ன பதில், ‘தாம்பத்தியத்தை தவிர்ப்பது மனித இயற்கைக்கே முரணானது. தாம்பத்தியம்தான் இல்லற வாழ்வின் ஆதாரம். கணவன் – மனைவி உறவை உறுதிப்படுத்துவது.

இப்போது சாந்தியின் இல்லறத்தில் இனிமை தவழத் துவங்கிவிட்டது. பெண்மைக்கு மெருகேற்றி உள்ளத்தில் அன்பை மலரச் செய்து, சாந்தியின் வாழ்க்கையில் வரவழைத்த அற்புத ஹோமியோபதி மருந்து – செபியா.

Dr. S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் – 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com