வெண்புள்ளி வியாதியை விரட்டும் ஹோமியோபதி மருந்துகள்

லூக்கோடெர்மா அல்லது விடிலிகோ (Leucoderma/vitiligo) என்று மருத்துவத்தில் கூறப்படும்
வெண்புள்ளி வியாதியை விரட்டும் ஹோமியோபதி மருந்துகள்

லூக்கோடெர்மா அல்லது விடிலிகோ (Leucoderma/vitiligo) என்று மருத்துவத்தில் கூறப்படும் வெண்தோல் வியாதி, கிருமிகளால் ஏற்படும் நோயோ தொற்றுநோயோ அல்ல. இது  உடல் அமைப்பு சார்ந்த நோய் (constitutional Disease). நோய் எதிர்ப்பு ஆற்றலின் தடுமாற்றத்தால், தவறுகளால் உருவாகும் விளைவு (Auto Immune Disease). இந்நோயை மற்றொரு தோல் நோயான குஷ்டத்தோடு (Leprosy) தொடர்புபடுத்தி ‘வெண்குஷ்டம்’ என்று கருதுவது தவறு. மருத்துவத் துறையினரே ‘வெண்குஷ்டம்’ என்று கூறுவது பெருந்தவறு. பேச்சு வழக்கில், ஒரு புரிதலுக்காக ‘வெண்தோல்’  பிரச்னையை நோய் என்று குறிப்பிட்டாலும் இதனை குறைபாடு (Deficiency) என்ற பொருளிலேயே அறிய வேண்டும்.

வெண்தோல் உருவாகக் காரணங்கள் :

அதீதமான மன உளைச்சல் (Excess Mental strains) அதிர்ச்சி, பயம், பதற்றம், ஆழ்மனத் துயரம் போன்ற கடுமையான மனநிலை பாதிப்புகளாலும் இப்புள்ளிகள் தோன்றுவதற்கு சாத்தியமுள்ளது என்பதை ஆங்கில மருத்துவம் கவனிக்கத் தவறுகிறது. ஹோமியோபதியில் மட்டும் இந்த அணுகுமுறை உள்ளது.

பரம்பரையாக வெண்தோல் திட்டுகள் வருவதில்லை என்று ஆங்கில மருத்துவம் உறுதியாகக் கூறுகிறது. ஹோமியோ மேதைகளின் அனுபவங்களும் நடைமுறை யதார்த்தமும் இதனை மறுக்கிறது.

கர்ப்ப காலத்தில் வெண்திட்டுக்கள் விழுந்த ஒரு பெண்ணின் குழந்தைக்கு ஆறு வயது அடைந்த பின் வெண்திட்டுக்கள் ஏற்பட்டுள்ளன. அப்பெண்ணின் தாயார் (குழந்தையின் பாட்டி) வெண்தோல் புள்ளிகள் உள்ளவர் வெண்திட்டுக்களுடைய இருவர் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தைகளுக்கும் வெண்திட்டுக்கள் வர வாய்ப்புள்ளது.

இரைப்பை மற்றும் குடல்களில் அமீபா கிருமிகள், ஒட்டுண்ணி (Parasite) போன்ற தொற்றுக் கிருமிகள் பரவி நச்சுத்தன்மைகளை உருவாக்கி, ஜீரணச் செயல்பாடுகளைச் சீர்குலைக்கின்றன. குறுகிய கால / நீண்ட கால வயிற்றுப்போக்கு (Amoebic Dysentary), வயிற்றுக் கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உருவாகும் போது சாப்பிடும், ஆற்றல் மிக்க ஆங்கில எதிர் உயிரி (Powerful Antibiotic drugs) மருந்துகள் குடல்களின் உட்புறச் சுவர்களின் தன்மையினை பெரிதும் பாதிக்கின்றன. இதனால் Tyrosine குறைபாடு ஏற்படுகின்றது. இதன் விளைவாக தோலுக்கு நிறமளிக்கும் மெலனின் (Melanin) உருவாக்கம் பாதிக்கப்படுகிறது. பலவித குடல்பூச்சிகள் (worms), கடுமையான ரத்த சோகை (Pernicious Anaemia – மிக ஆபத்தானது) போன்ற காரணங்களாலும் நிறமிகள் உற்பத்தி சீர் குலைகின்றது.

ஆங்கில மருந்து, மாத்திரை, வெளிப்பூச்சுக் களிம்புகளால் உள் அமுக்கப்பட்ட முந்தைய தோல் நோய்களுக்கு பின் வெண்தோல் புள்ளிகள் வர வாய்ப்புள்ளது.

அடிக்கடி ஆங்கில தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும் அளிக்கப்படுவோர் உயிராற்றல் பாதிக்கப்பட்டு வெண்திட்டுக்கள் ஏற்படுவதை கண் கூடாகக் காணலாம். (அடிக்கடி பயணம் செய்வோர், ராணுவப் பணிகளில் இருப்போர் போன்றோருக்கு பலவிதத் தடுப்பூசிகள் போடப்படுவதால் எளிதில் வெண்திட்டுக்கள் ஏற்படுகின்றன).

மின்சாரம் அல்லது சூட்டின் மூலம் நோயுற்ற சதைப்பகுதியை அல்லது மரு, பாலுண்ணிகளை தீய்ந்து அழிக்கும் முறையால் (cauterization) மெலனின் அணுக்கள் அழிய நேர்கின்றன. வெண் திட்டுகள் தோன்றுகின்றன.

ஒருவருக்கு டி.பி. தொற்று கடந்த காலத்தில் இருந்திருந்தாலோ, அவரது குடும்பத்தினருக்கு டி.பி. பாதித்த வரலாறு இருந்தாலோ வெண்புள்ளிகள் வர வாய்ப்புள்ளது.

நீரிழவு காணப்பட்டாலோ, குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தாலோ வெண்புள்ளிகள் வரக்கூடும்.

டிபி சர்க்கரை நோய், காமாலை போன்றநோய்கள் மெலனோசைட்டெல்களின் இயக்கத்தை பாதித்து தோலுக்கு நிறம் தரும் மெலனின் நிறமிகளை மறையச் செய்கின்றன.

சத்துக் குறைபாடுகளாலும் குறிப்பாக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைவு நிறமிகள் உருவாக்கம், இயக்கம் ஆகியவற்றை பாதிக்கிறது. (வைட்டமின் சி அதிகளவு சேர்க்கப்பட்டாலும் நிறமிகள் பாதிக்கப்பட்டு வெண்புள்ளிகள் ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன)

தீக்காயங்கள் விபத்துக் காயங்கள், மிகச் சூடான நீர் மற்றும் திரவங்களால் தோலும் தோலிலுள்ள சிறப்புச் செல்களான Chromatophores களும் (இவை மெலனினை உள்ளடக்கியவை) அழிந்து விடுகின்றன. சத்துக்குறைவுகளால் குறிப்பாக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைவால் வெண்புள்ளி வரக்கூடும். வைடமின் சி சத்து அதிகம் சேர்ந்தாலும் வெண்புள்ளி விழக்கூடும்.

ஹோமியோபதி முறைப்படி இந்நோயின் மியாசப் பின் புலத்தையும் கண்டறிந்து சிகிச்சை செய்தால் அதிக பலன் பெறமுடியும்.

சோரா (Psora miasm) : சிரங்குகள், படைகள் (Scabies, Eczema, Ring worm) போன்ற தோல் நோய்கள் வெளிப்பூச்சு மருந்துகளால் உள்ளமுக்கப்பட்ட வரலாறு இருப்பின் சோரா எதிர்ப்பின் தலைமை மருந்தான சல்பர் பயன்படும்.

சைகோசிஸ் (Psycosis) : அடிக்கடி தடுப்பூசிகள் போட்ட வரலாறு இருப்பின் சைகோடிக் மியாசத்தின் பிரதான மருந்தான ‘தூஜா’ நற்பலன் அளிக்கும்.

சிபிலிஸ் (syphilius) : உடம்பின் இருபுறமும் வெண் திட்டுகள் (Bilateral Patches) தோன்றும். சிபிலிஸ் உடல்வாகினர்க்கு உபாதைகள் இரவில் அதிகரிக்கும். வாய்வேக்காடு (புண்) (Stomatitis) அடிக்கடி தோன்றும். மெர்க்குரி மருந்துகளும், லூட்டிகமும் (சிபிலினமும்) பயன்படும்.

டியூபர்குலர் மியாசம் : நோயாளியிடமோ அவரது குடும்பத்தினரிடமோ டிபி வரலாறு இருந்தால் அல்லது நோயாளி நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டால் இம்மியாச வகை சார்ந்த பாசிலினம், டியுபர்குலினம் (Bacillinium & Tuberculinum) இரு மருந்துகள் சிறப்பான நன்மை தரும்.

காரணங்களாகக் கருதப்படும் தவறான கருத்துக்கள்

வெண்தோல் (white skin) நோயை வெண் குஷ்டம் (white leprosy) என்று கூறுவது தவறு. அசைவ உணவு உண்பவர்களுக்கு வெண்தோல் நோய் வரும் என்று கூறுவதும் ஆதாரமற்ற கற்பனை. சைவ உணவு, உண்பவர்களும் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை. கெட்ட ரத்தம் காரணமாகவோ, ரத்த தானம் செய்தாலோ, பெற்றாலோ இந்நோய் ஏற்படலாம் என்று கருதுவதும் தவறு. இந்நோயைப் பரப்பும் கிருமிகள் குறிப்பிட்ட நபரின் உடலுக்குள் புகுந்து விட்டதாகவும், அது பிறரைத் தொற்றுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறுவது வெறும் கற்பனை பயம்.

முரண்பட்ட உணவுகளை உண்ணுதல், (குறிப்பாக மீன் சாப்பிடும் போது பாலும் தயிரும் சாப்பிடுதல்) காரணமாக தோலில் வெண்திட்டு ஏற்படுவதாகக் கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. ஆயினும் பொருந்தாத உணவுகளை நீண்ட காலம் உண்போருக்கு சில பல தோல் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதிகளவு உணவு உண்ணுதல், மதுப்பழக்கம், பலவித இறைச்சி முட்டை, மீன்களை நன்கு சமைக்காமல் உண்ணுதல், காரணமாக உடலினுள் நச்சுத்தன்மைகள் ஏற்படுவதும், நுண் கிருமிகள், ஒட்டுண்ணிகள் பரவுவதும் அதன் காரணமாக உடலின் திசுக்கள், செல்கள் சேதமடைவதும், தோலுக்கு நிறமளிக்கும் நிறமிகளை உற்பத்தி செய்யும் மூலாதாரங்கள் சிதைவடைவதும் நிகழ்கின்றன. பலவித ஆங்கில மருந்துகளும், அதிகப் புளிப்பான பண்டங்களும் வெண்புள்ளிகள் விளைவிப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

வெண் தோல் வியாதி அறீகுறிகள் :

சிறு சிறு புள்ளிகளாய் எளிதில் தோன்றுகின்றன.

ஒவ்வொரு புள்ளியிலும் உருவம் விரிவடைந்து திட்டு (Patch) வளர்கிறது

புள்ளிகளும், திட்டுகளும் வளர்க்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்து அகலமான திட்டுகளாக (Patches) விரிவடைகின்றன.

ஆரம்பத்தில் சற்று பழுப்பான நிறத்திலும் (Pale) பின்னர் வெண்மையாகவும் நாளடைவில் மிக வெண்மையாகவும் மாறி விடுகின்றன (வெயிலில் பார்த்தால் பால் போன்ற வெண்மை நிறத்தில் (milky white) இவை பளிச்சிடும்.

சில சந்தர்ப்பங்களில் இத்திட்டுக்களீல் அரிப்பு (Pruritis) இருக்கலாம்.

மெலனின் நிறமிகள் சிதிலமடையாமல் வெண் தோல் திட்டுகள் மட்டுமின்றி முடிவெளுத்து போவதும் உண்டு. இதனால் இளவயதிலேயே மீசை, புருவம், தலைமுடி வெண்மை நிறமாகிவிடும் (Prematured greying).

வெண்புள்ளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

ஆங்கில மருத்துவத் துறையில் வெண்புள்ளிகளைக் குணப்படுத்த இயலாது. குணப்படுத்த முடியும் என்று வேறு எந்த முறை மருத்துவரும் சொன்னால் அவர் போலி மருத்துவர் என்று அநாகரிமாகப் பிரகடனம் செய்கின்றனர். இவர்கள் கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று நம்புமாறு உத்தரவிடுகிறார்கள். ஆங்கில மருத்துவ ஏகாதிபத்தியத்தின் விஞ்ஞான ஆய்வுகளின் பெயரால் அறிவிக்கப்படும் பாரபட்சமான அறிவிப்புக்களைப் புறந்தள்ளி ஹோமியோபதியும் மாற்று மருத்துவங்களும் எல்லையற்ற குணப்படுத்தும் ஆற்றலை நிரூபித்து வருகின்றன.

சர்வதேச சிகிச்சை அனுபவங்களின் வாயிலாக வெண்தோல் வியாதியை குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவத்துக்கு அதிகபட்ச சாத்தியம் உள்ளது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உடலில் எங்கேனும் இரண்டு மூன்று புள்ளிகளோ, திட்டுக்களோ தோன்றினால், அல்லது சமீப காலத்தில், சமீப காரணங்களால் சிறு திட்டுக்கள் தோன்றினால், அல்லது இளம் வயதினருக்கு இவை தோன்றினால் ஹோமியோபதி மருந்துகள் அதிகபட்ச பலன்களை அளிக்கின்றன. ஏறக்குறைய முழு குணம் அளிக்கின்றன. மிகவும் நீண்டகால திட்டுகள், முதியோரின் உடலில் காணப்படும் பெரிய திட்டுக்கள் மேலும் பரவாமல் தடுக்கவும், புதிய திட்டுகள் தோன்றாமல் தடுக்கவும், குறிப்பிட்டளவு குணமளிக்கவும் ஹோமியோபதி சிகிச்சை உதவுகின்றது. ஆங்கில மருத்துவத்தில் இவை எதுவும் எண்ணிப் பார்க்கவே இயலாது.

வெண்புள்ளிகளைக் குணப்படுத்த உதவும் முக்கியமான ஹோமியோபதி மருந்துகள் :

சல்பர், சோரினம், ஆர்ஸ் சல்ப் பிளேவ், மெர்க்சால், நேட்ரம்மூர், செபியா, ஆர்சனிகம் ஆலபம், சிலிகா, ஹைட்ரோ கொடைல், டியூபர்குலினம், பேசிலினம், தூஜா

Ars, Sul, Flav எனும் மருந்தினை வெவ்வேறு வீரியங்களில் சற்று நீண்ட காலம் பயன்படுத்தி அனுபவம் நிறைந்த ஹோமொயோ மருத்துவர்கள் வெற்று பெற்றுள்ளதை பதிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் ASF 6 or 30 இரண்டு மாதங்களும் முன்னேற்றம் தெரியாவிட்டால் பின்னர் 30 வீரியத்திலும் பின்னர் தெவையெனில் (முழு குணம் கிட்டாவிட்டால்) ASF 200 வீரியத்தில் வாரம் ஒரு முறையும் அளித்து வெற்றி பெற்றுள்ளனர். எனினும் நோயாளியின் மொத்தக் குறிகளையும், தனித்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சிகிச்சையளித்தால் விரைவான, நிறைவான குணம் கிடைக்கும்.

வெண் தோல் நோயாளிக்கு மலர் மருந்துகள் :

ரெஸ்கியு ரெமடி : வெண்புள்ளிகள் முதன் முதலில் ஏற்பட்டவுடன் மனத்தில் தோன்று பதற்றம், குழப்பம் நீக்க உதவும்.

கிராப் ஆப்பிள் : தோலின் மாற்றங்களை மனம் அருவருப்படைந்து பாதிக்கப்பட்டவர்க்கு மனத்தையும் மாற்றும், நோயையும் நீக்கும்.

மிமுலஸ் + ஆஸ்பன் : வெண் தோல் வியாதி குறித்து ஏற்படும் பயங்களைப் போக்கும்.

கோர்ஸ் : எந்த மருந்தாலும், சிகிச்சையாலும், இந்நோயைக் குணமாக்க முடியாது எனும் அவநம்பிக்கையைப் போக்கி உரிய வழி காண உதவும்.

ஸ்வீட்செஸ்ட்நட் : வாழ்க்கையே முடிந்து விட்டது போன்ற விரக்தி மனநிலையை மாற்றி நம்பிக்கையளிக்கும்.

ஹாலி / வில்லோ : வெறுப்பு, சந்தேகம், மருத்துவர்களை குற்றம் சாட்டும் மனநிலை, எதிலும் திருப்தியடையாத மனநிலை உள்ளவர்களுக்கு இந்த இணை மருந்துகள் பயன்படும்.

குறிப்பு : தோலில் வெண்புள்ளி ஏற்பட்டவர்களின் மன ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், எதிர்மறைத் தன்மைகளுக்கு ஏற்ப மலர் மருந்துகள் தொடர்ந்து சில மாத காலம் அளிக்க வேண்டும். பிறமுறை சிகிச்சைகளோடும் மலர் மருந்துகள் இணைத்துக் கொடுக்கலாம்.

Dr.S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell – 9443145700

Mail – alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com