தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியுமா?

நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போல சுற்றிக் கொண்டே இருக்கிறது
தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியுமா?

'நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போல சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன் வைத்துச் சூதாடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருள்கள் காணாமல் போகின்றன’ என்று இன்றைய வாழ்வின் இருப்பைச் சித்திரிக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

வாழ்க்கை வெள்ளத்தின் சுழிகளில் சிக்கி எல்லாவற்றையும் இழந்து தங்களையும் இழக்க நேரிடும் சோகங்கள் நிகழாத தேசங்கள் இல்லை. ஆம், தற்கொலை என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை.

செக்ஸ் பிரச்னைகள் முதல் ஷேர் மார்க்கெட் பிரச்னைகள் வரைத் தற்கொலைக்கு விதவிதமான பின்னணிகள் உள்ளன. ஆகாயக் கோட்டைகள் கட்டி பேராசையில் பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் பங்கு கொண்டோரில், சில ஆண்டு முன் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியின் போது 16 சதவிகிதத்தினர் உலகமே அஸ்தமித்துவிட்டதாகக் கலங்கி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனன் என்று அதிர்ச்சி தரும் புள்ளி விவர ஆய்வுகள் அறிவிக்கின்றன.

சிறுவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை, மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை தற்கொலையில் ஈடுபடாத சமூகப் பிரிவுகளே கிடையாது. ஏழைகள் மட்டுமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அல்லது தற்கொலையில் ஈடுபடும் அனைவரும் மனநோயாளிகளா? இந்த இரண்டிலும் முழு உண்மையிருப்பதாகக் கூற முடியாது. பிரபல சினிமா அதிபர் ஜி.வி. பிரபல இதய நிபுணர் டாக்டர் செரியன் போன்றவர்கள் கூட தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒரு மனிதன் ஏதோ ஓர் உந்துதலில் சுய விருப்பத்துடன் சுய தீர்மானத்துடன் தன் உயிரைத் தனக்கு உகந்த ஓர் வழியில் போக்கிக் கொள்வதைத் தான் தற்கொலை என்கிறோம். தற்கொலைக்கான உந்துதலுக்குக் தோறுவாய் காரணங்கள் எவை?

போட்டிகள் நிறைந்த உலகம், போட்டிகளே வாழ்க்கையாகிவிட்ட இறுக்கம், தோல்விகளால், விரக்திகளா, நிறைவேறாத ஆசையால், மன அழுத்தத்தால், துக்கத்தால், குழப்பங்களால், அவமானங்களால், பயங்களால், பாலியல் துன்புறுத்தல், வறுமை, வரதட்சனை, கடன், தேர்வுத் தோலி, காதல் முறிவு, வேலையின்மை, குழந்தையின்மை போன்ற பல்வேறு சமூகப் பொருளாதார மற்றும் குடும்பக் காரணங்களால் உள்ளம் நொறுங்கி தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்படுகின்றனர்.

'உலகிலேயே மிக நீண்டது எது? சீனாவின் சுவரா? அல்லது நைல் நதி கடந்து செல்லும் வழியா? இரண்டுமில்லை. வேலையற்றவனின் பகல் பொழுது தான்!’ என்று கூறும் எழுத்தோவியர் ஒருவரின் கருத்துக்களில் யார் முரண்பட முடியும்? ஆம்...உண்மை தான்...வேலையற்ற வாலிப நெஞ்சங்களுக்கு நீண்ட நெடிய வேதனைமிக்க பகல்பொழுதுகளை விட இருளும், தற்கொலைகளும் நிம்மதி தருகின்றன.

உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பார்கள். விளைவு? நாட்டுக்கே படியளக்கும் விவசாயிகளில் ஒரு பகுதியினர் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மனப்பாடக் கல்வியே மகத்தான கல்வி, மதிப்பெண்கள் தான் மாணவரின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் அளவுகோல் என்று படுமோசமான ஓர் கல்விச்சூழல் நம் வாரிசு செல்வங்களை வாட்டி வதைத்து வருகிறது. அதனால் தான் தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் எதிர்கால இந்தியச் சிற்பிகளாய் ஒளிர வேண்டிய இளந்தளிர்களில் சிலர் மன்முடைந்து மரணத்தைத் தழுவுகின்றனர்.

மரணத்தை நேசிப்பவர்கள் யாருமில்லை. மரணம் இனிமையானது அல்ல. மரணம் தன் கோரப் பற்களுடன் நம்மை நெருங்குமானால் பயம் நம்மை கவ்வும். வாழ்வின் அந்திம நேரம் நெருங்கி விட்ட மனிதனுக்கு கூட மேலும் மேலும் வாழத்தான் ஆசை.

இதற்கு மாறாக வாழ்வை உக்கிரமாக வெறுத்துப் புறக்கணித்து மூன்று விதமான மனிதர்கள் தான் தற்கொலை முடிவுக்குச் செல்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

1. பிறருடன் இயல்பாகப் பழகாமல், வெளிப்படைத் தன்மையில்லாமல் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கிடப்பவர்கள் (Introverts)

2. அதியுணர்ச்சி நபர்கள் (Over sensitive persons)

3. அகந்தையும் பிடிவாதமும் உள்ளவர்கள் (Haughty and Obstinate)

தற்கொலை செய்வோரில் பெரும்பாலோர் நஞ்சு அருந்தியே அழிகின்றனர். இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்கின்றனர். நீரில் குதிப்பது, பள்ளத்தில் குதிப்பது, துப்பாக்கியில் சுட்டுக் கொள்வது, வாகனங்கள் முன் விழுவது, தீக்குளிப்பது போன்றவை மற்றவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள்.

கடந்த காலஙக்ளில் கொள்ளை நோய்களிலும் தொற்று நோய்களிலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் மாண்டனர். இன்று இருதய நோய், பக்கவாத நோய், புற்றுநோய், குடி போதை மற்றும் தற்கொலை போன்றவற்றால் மாண்டு மடிகின்றனர்.

2000 ஜனவரியில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவர ஆய்வு இந்தியாவில் ஆண்டுக்கு 9000 தற்கொலை நிகழ்வதாகக் கூறுகிறது. தினம் 27 பேர்கள் என்றளவில் 1 மணிக்கு 1 மனிதர தற்கொலை செய்து கொள்கிறார். இதில் கேரளாவிற்கு முதலிடம். இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளில் 50% சில நகரங்களில் மட்டும் நடக்கின்றன. 2006 ஆம் அண்டு வரை தற்கொலை நகரங்களில் பெங்களூர் முதலிடம் வகித்தது. 2007 முதல் அந்த இடத்தை சென்னை தட்டிப் பறித்தது.

தேசிய மாதிரி ஆய்வு (National Sample Survey) தரும் விவரப்படி இந்தியாவில் 1993-94-ல் உணவுக்காக ஒரு குடும்பம் 56.4% வருமானத்தைச் செலவிட்டுள்ளது. 1999-2000ல் இச்செலவினம் 48.1% ஆகக் குறைந்து விட்டது. உணவைத் தவிர்த்து துணிமணிகள், மது, புகையிலை மற்றும் நுகர்வோர் பொருட்கள் செலவு அதிகரித்துவிட்டது.

இதற்கு காரணம் என்ன? டிவிக்களின் ஆதிக்கம். சந்தை மயம், உணவில், உடல்நலத்தில் உண்மையான, உறுதியான அக்கறையின்மை, கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கிப் பாதாளங்களில் விழுந்து பரிதவிக்கும் நிலை. நமது கலாச்சாரம், பண்பாடு, தட்பாவெப்பம், உணவுப் பழக்கம் போன்றவற்றோடு எவ்விதத்திலும் பொருந்தாத சுயதன்மைகளைச் சீரழிக்கிற வெளிநாட்டுப் பொருட்கள், போதைகந்ளை அனுபவிக்கத் துடிக்கும் மோகம் (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல செய்கிற இவர்களை மகாத்மாவே மன்னிப்பீராக)

அரசுகளின் அனுமதியோடு ஆசிர்வாத்தோடு நடைபெறும் அன்னியக் கலாச்சாரப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புறம். வறுமைத் தீயிலும் அறியாமைச் சேற்றிலும் மூழ்கிக் கிடக்கும் பரிதாபத்துக்குரிய மக்கள் மறுபுறம், கிராமங்களுக்கு செல்போன் வசதியும் இணைய தளம் வசதியும் வந்துவிட்டால் இந்திய விண்வெளிக் கலன்கள் விண்ணில் மிதந்துவிட்டால் இந்தியா நவீன நாடாகி விடுமா? கல்வியற்ற இந்தியரும், வேலையற்ற இந்தியரும், நோயிலும் வறுமைத் துயரிலும் வெந்து சாகும் இந்தியரும் குவிந்து கிடக்கும் போது இவர்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய வழிகாணாமல் நவீன தேசமாக எப்படி மாறும்?

ஹோமியோபதி மருத்துவம் மனித குலத்துக்குக் கிடைத்த மாபெரும் நன்கொடை. வாழ்க்கைப் பாலைவனத்தின் வெப்பக்காற்றில் மூச்சுத் திணறி தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுபவரின் மனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வேதனையைத் தணித்து, எதிர் நீச்சலிட்டு முன்னேறும் மன வலிமையை வழங்கவும் ஹோமியோபதி மருந்துகள் உயிர் காக்கும் தோழர்களாய் உதவுகின்றன.

பாதுகாப்பற்ற தன்மையின் (Insecure Feeling) எல்லைக்கே வந்து நிற்கும் போது தான் தற்கொலை தவிர வேறுவழியில்லை என்ற மனநிலை உருவாகிறது. சராசரியாக 20 முதல் 30 சதவிகிதம் பேர்கள் வரை இதுபோன்ற மன முடக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலை நீடித்தால் உறுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய உணர்வும் எண்ணமும் மேலோங்கும் போது முறையான கலந்தாய்வு (Cousellingt) மூலம் ஹோமியோபதி சிகிச்சை மூலமும் தற்கொலை முடிவிலிருந்து வெளியேற முடியும். இதற்கு உதவும் ஒரு சில மருந்துகளை அறிவோம்.

கடுமையான வேதனை, விரக்தி காரணமாக தற்கொலை எண்ணம் - ஆரம்மெட்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழையாகி விடுவோம் என்ற பயம். வியாதி தீராதென்ற பயம், கவலை காரணமாக தற்கொலை எண்ணம் - சோரினம்.

விஷம் அருந்தி உயிரை மாய்க்கும் எண்ணம் - ஆர்சனிக்கம், பெல்லடோனா, பல்சடில்லா.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய எண்ணம் - ஆர்சனிக்கம், பெல்லடோனா

தொழில் கஷ்டாங்களால் தீப்பெட்டி ஆலை மருந்து (பாஸ்பரஸ்) சாப்பிட்டு தற்கொலை செய்ய எண்ணம் - இக்னேஷியா.

ரயில், பஸ், லாரி, போன்ற வாகனங்களின் முன்பு விழுந்து தற்கொலை செய்யும் மனநிலை - ஆர்சனிகம், காலிபுரோம், லாக்கஸிஸ்

மாடி, ஜன்னல், குன்று போன்ற உயரமான இடத்திலிருந்து குதித்து அல்லது நீரில் குதித்து அல்லது தூக்கில் தொங்கி அல்லது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் - ஆரம்மெட்.

நீரில் மூழ்கிச் சாக விருப்பம் - பெல்லடோனா, ஹயாஸ்யாமஸ், டிரோசிரா, ரஸ்டாக்ஸ், உஸ்டிலகோ.

பாலத்தைக் கடக்கும் போதே நீரில் குதித்துச் சாக எண்ணம் - Arg.nit

காதல் தோல்வியால் தற்கொலை முடிவு7 - பெல்லடோனா, காஸ்டிகம், ஸ்டாபிசாக்ரியா.

பிறரால் திருட்டுப்பட்டம் சூட்டப்பட்ட பின் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுதல் - ஹெல்லிபோரஸ்

நீண்ட கால வீட்டு நினைவுத் துயரால் தற்கொலை எண்ணம் - காப்சிகம்

துப்பாக்கியால் சுட்டுச் சாக எண்ணம் (ஆனால் நிறைவேற்ற பயம்) - பல்சடில்லா, அனகார்டியம்.

பட்டினி கிடந்து சாக விருப்பம் - மெர்க்சால்

மன அழுத்தம், ஆழ் மனவருத்தாங்களால் தற்கொலை எண்ணம் - இக்னேஷியா

கணவன் மீதும், உடலுறவு மீதும் குழந்தை மீதும் உள்ள வெறுப்பால் தற்கொலை எண்ணம் - அக்னஸ் காஸ்டஸ்

மாதவிடாய் நாட்களில் தற்கொலை உணர்வு - மெர்க் வைவஸ்

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் - 626203

செல் 9443145700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com