23. மூட்டு ஜவ்வுகள் முக்கியமா?

ஜவ்வு மிட்டாய்க்கும் மூட்டு ஜவ்வுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.
23. மூட்டு ஜவ்வுகள் முக்கியமா?

ஜவ்வு மிட்டாய்க்கும் மூட்டு ஜவ்வுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும் எதற்கு இந்த பெயர் வைத்தார்கள் எனில் ஜவ்வுகள் என்றாலே இழுவைத்தன்மையைக் குறிக்கும் ஒரு சொல் என்பதால் ஜவ்வுகள் என்ற பெயர் ஏற்பட்டது. தினமும் எதற்காகவோ ஓடிக் கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் மூட்டுகளின் இயக்கம் மிகவும் முக்கியம். மூட்டுகள் மூளையின் துணையோடு இயங்கவில்லை என்றால் எவ்வளவு ஓடியும் வலியுடன் களைத்து திரும்ப வேண்டி வரும். அதாவது உங்கள் மூட்டுக்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த ஜவ்வுகள் அளப்பரிய பணியை தினமும் செய்து கொண்டே வருவதை நாம் உணர முடியவில்லை என்றாலும் உண்மை அதுவே.

உங்கள் மூட்டுகள் இயல்பாக இயங்க மூட்டுகளின் உள்ளே உள்ள ஜவ்வுகள் தங்கள் சீரிய பணியை எப்போதும் செய்து கொண்டே இருக்கிறது. இதனை அறிய உங்கள் மூட்டுகளை பின் பக்கமோ அல்லது முன் பக்கமோ இயல்பான நிலையை மீறி இழுத்துப் பாருங்கள். உங்களின் மூட்டுகளின் உள்ளே கடுமையான வலி ஏற்படுவதை உணர்வீர்கள். அதாவது உங்கள் மூட்டுகள் இயல்பு நிலையை மீறியே அல்லது கடுமையான வேலை பளுவை உணரும் போதோ மூட்டுகளின் ஜவ்வு உங்களுக்கு வலியை உணர்த்துகிறது.

தொடர்ந்து நீண்ட நேரம் இயங்கும் யாருக்கு வேண்டுமானலும் ஜவ்வுகள் பாதிக்கப்படலாம். உங்கள் முதுகில் ஏற்படும் வலிகள் கூட ஜவ்வுகளில் ஏற்படும் இறுக்கம் காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஜவ்வுகள் இறுக்கம் அதிகமானாலும் உங்கள் மூட்டுக்களின் இயக்கம் பாதிக்கப்படும் போது மூட்டுக்களை சுற்றியுள்ள தசைகள் அதிக சிரமத்துடன் இயங்க நேரிடும். அப்போது எலும்புகளில் அதிகமான உராய்வுத்தன்மை ஏற்பட்டு மூட்டுகள் நாளடைவில் தேய்மானம் ஆகத் தொடங்கும். எலும்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூட்டுக்களை சுற்றியுள்ள ஜவ்வுகள் உள்ள பக்கமாக தாங்கிக் கொண்டிருக்கும் எலும்புகளை இயக்கத்தின் போது ஏற்படும் அதிவேகமான உராய்வுகளை கட்டுப்படுத்த கண் இமைக்காமல் பணி செய்து கொண்டேயிருக்கும். ஓடும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும், குதிக்கும் போதும் சவ்வுகளின் இயக்கம் மிக முக்கியமானது. இதனை ஆங்கிலத்தில் DYNAMIC STABILITY என்பார்கள். இயக்கத்தின் போது ஏற்படும் எலும்புகளின் இயக்கத்தை உருவாக்குவது உடல் இயங்கு தசைகள்.

அதே போல் இயக்கம் நடைபெறும் போது மூட்டு இயக்கத்தை நெறிப்படுத்துவது மூட்டுகளின் உள்ளே உள்ள ஜவ்வுகள். பொதுவாக முன்பின்னும் அல்லது மூட்டுகளின் பக்கவாட்டில் இரண்டு பக்கமும் அமைந்து இருப்பது 4D மூட்டு இயக்கத்தை நான்கு பக்கமும் தற்காத்து கொண்டே இருப்பது முக்கிய பண்பாகும். இறைவன் படைப்பில் மனிதன் கூட அதிசயமே. இது போன்ற உள்ளுணர்வு மிக்க ஜவ்வுப் பகுதிகள் மூளையோடு நேரிடையாக தொடர்பில் இல்லை என்றாலும் உடம்பில் உள்ள உணர்வு கடத்திகள் மூலம் மூளையோடு தொடர்பில் இருப்பதால் எப்போதும் இயங்க ஆயத்தமாக இருப்பது இதன் முக்கிய பண்பாகும். எழும் போது, ஓடும் போது விழும் போது மூட்டுக்களின் இயக்கம் பாதிக்கப்படாமல் காத்து கொள்வது இதன் முக்கிய வேலை என்று ஆய்வாளர்கள்.

பெரும்பாலும் நீராலான ஜவ்வுகள் COLLEGEN என்ற சிறப்பு புரதங்களால் பின்னப்பட்டு நார்களால் ஆனதால், இந்த நார்கள் அதிக இழுவைக்கு உள்ளாகும் போது கிழிந்து போக வாய்ப்புகள் அதிக உள்ளதால் இழுவையை தாங்கும் வண்ணம் நம் உடலை கட்டமைக்க நாள்தோறும் உடற்ப்பயிற்சிகள் செய்வது முக்கியம். இதனை எளிதில் அடையவே யோகா போன்ற இழுவையை அதிகமாக தாங்கிக் கொள்ளும் ஆசனப் பயற்சிகளை செய்வது முக்கியமாகிறது.

பெரும்பாலும் என்னிடம் வரும் முதுகு வலி உள்ள நண்பர்கள் கேட்பது - நான் யோகா செய்யலாமா? கண்டிப்பாக யோகா செய்யலாம், ஆனால் நன்கு தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியர் அதனை கண்காணிக்கும் போது உங்கள் தேவையும் அதன் பயன்களும் உங்களை எளிதில் வந்தடைவதோடு, உங்களுக்கு யோகாவின் அனைத்து பலன்களும் கிடைப்பதை உணர முடியும்.

T. செந்தில்குமார்

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com