25. கோர் தசைகளும் முதுகு வலியும்

கோர் தசைகளை (Core Muscles) வலுவாக்குவது என்பது உடலை சிறிது நேரத்தில் இயல்பான
25. கோர் தசைகளும் முதுகு வலியும்

கோர் தசைகளை (Core Muscles) வலுவாக்குவது என்பது உடலை சிறிது நேரத்தில் இயல்பான நிலையில் இருந்து சக்தி மிக்க நிலைக்கு கொண்டு செல்ல உதவும் எளிய முறையாகும். கோர் தசைகள் பொதுவாக நான்கு வகைகளாக பிரிப்போம். மற்ற எந்த மருத்துவத்திலும் இல்லாத சிறப்பான பயற்சி முறைகள் பிசியோதெரபி மருத்துவத்தில் நாங்கள் வழங்குகிறோம். அதாவது வயிற்று தசைகள் கீழ்ப் பகுதியில் உள்ள தசைகள் உதரவிதானம் எனப்படும் (Diaphragm) மற்றும் கீழ்ப் பகுதியில் அதாவது உடலின் மூத்திர பையை தாங்கிக் கொண்டும் உடலின் இனப்பெருக்க உறுப்புகளின் தொடர்புள்ள சில தசைகள் சேர்ந்து இந்த நான்கு தசை பிரிவுகளும் கோர் தசைகள் எனப்படும்.

பொதுவாக பெண்களுக்கு கோர் தசைகள் எளிதில் தனது வலுவை இழந்து விட நேரிடும். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் மிக முக்கிய காரணம் குழந்தை தாங்கிக் கொண்டே இருந்த வயற்று தசைகள் 9 மாத அதிக அழுத்தத்திற்கு பின் தனது இழுவை தன்மை இழந்து லகுவாகி தொங்க ஆரம்பிக்க நேரிடும். பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு வரும் தொப்பை உடல் பருமனால் ஏற்படுவது அல்ல. வயற்று பகுதியில் உள்ள தசைகள் லகுத்தன்மை இழந்து போவதே காரணம். இதைப் பற்றி வேறொரு கட்டுரையில் எழுதிகிறேன்.

நான்கு தசைகளும் தனது வலுவை இழக்கும் போதுதான் தொப்பை, முதுகு வலி, அதிக நேரம் நிற்க முடியாமலும் நடக்க முடியாமலும் கடின நிலை உருவாகும். எனவே நாம் பயற்சி செய்யும் போது சிறது நேரம் ஒதுக்கி மேற்குறிப்பிட்ட தசைகளுக்கு தனிப்பட்ட முறையில் பயற்சிகளைத் தொடர்வதன் மூலம் நல்ல வலுவான கட்டுகோப்பான அழகிய வயிறு கிடைப்பதோடு நமது தொடர்ந்து பல நேரம் நிற்கவும் இயங்கவும் நடக்கவும் உதவும்

தொடர்ந்து அடுத்த நிலைகளுக்கு செல்லும்போது அடைந்த தசை வலுவை தற்காத்துக் கொள்ள சிற்சில கடின பயற்சிகளை உங்கள் ட்ரைனரின் வழிகாட்டுதல்களிலும் அல்லது பிசியோதெரபி மருத்துவரின் கண்காணிப்பிலும் செய்வது மிக மிக அவசியம்.

கோர் தசைகளை வலுப்படுத்த பல்வேறு பயற்சிகள் இருந்தாலும் முன் கட்டுரையில் கூறியது போல் மூச்சுப் பயற்சிகள் மிக முக்கியம். மூச்சுப் பயற்சிகளுடன் சேர்ந்து நம் உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் எளிதில் வலு பெறுவதை உணர முடியும். கோர் தசைகள் வலுவை இழந்து லகுவாகும் போது, முதுகுத் தசைகளுக்கு நம் உடலின் எடையை தாங்க நேரிடும் போது முதுகு தசைகள் எளிதில் சோர்வாகிவிடுவதால் அதுவே நமக்கு முதுகு வலியாக உணர முடிகிறது. அதற்கெனவே யோகா போன்ற உடற்பயிற்க்சி கலைகளில் கோர் தசைகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆசனங்கள் ஏராளமாக உள்ளன.

முதுகு வலியின் முதற் காரணம் கோர் தசைகள் வலுத்தன்மை இழப்புதான். இதனை உணர்ந்து உங்கள் பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யும் கோர் பயற்சிகள் எளிதில் வலுவை அதிகப்படுத்தி உங்களுக்கு முதுகு வலியை போக்குவதோடு மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது.

வரும் தொடர் கட்டுரைகளில் இதன் அடுத்தக் கட்ட படிநிலைகளையும் six pack கட்டமைப்பைப் எப்படி பெறவது அதற்குத் தகுந்த பயற்சி முறைகள் என்ன என்றும் விளக்கமாக கூறுகிறேன். 

T. செந்தில்குமார்

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com