3.நாமே நமக்கு மருத்துவர்

வலியை பற்றி மருத்துவ உலகம் இன்று தனது பார்வையை மாற்றத் தொடங்கி இருப்பது
3.நாமே நமக்கு மருத்துவர்

வலியை பற்றி மருத்துவ உலகம் இன்று தனது பார்வையை மாற்றத் தொடங்கி இருப்பது நமக்கெல்லாம் பெரிய ஆறுதலான செய்தி. கடந்த சில வருடங்களாக எந்த வலியென்றாலும் ஒரு வலி மாத்திரையையும் கூடவே ஒரு இணைப்பு மாத்திரை ஒன்றையும் (அது வலி மாத்திரையால் வரும் பக்க விளைவை மட்டுபடுத்த தரப்படும் மாத்திரையாம்) தருகிறார்கள். தேவை இருப்பின் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்றும் சில மருத்துவர்கள் கூறுவதுண்டு. முன்பெல்லாம் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பார். சளி காய்ச்சல் வயிற்று வலி இப்படி அனைத்து நோய்களுக்கும் மருத்துவர் பார்ப்பார். அவரை நாம் குடும்ப நல மறுத்தவர் என்போம். ஆனால் மருத்துவ துறையின் அசுர வளர்ச்சியால் தனிபட்ட மருத்துவர் ஒவ்வொரு நோய்க்கும் வந்து விட்ட நவீன மருத்துவத்தில் கட்டுகடங்காத மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாகிவிட, அவர்களின் வியாபாரத்திற்கு நாம் கொடுக்கும் விலை நம் ஆரோக்கியம்.

சில நேரங்களில் தேவையே படாத போதும் மருத்துவர் கூறிவிட்டார் என்று பத்து நாட்கள் கொடுத்த வலி மாத்திரையை சாப்பிட்டு விட்டே பிரதி பலனை அடைந்து விட்டதாக எண்ணி கொள்வோர் எத்தனை பேர்! மீண்டும் குடும்ப மருத்துவருக்கே வருகிறேன். எங்கே போய்விட்டார் இவர், அங்கே தான் இருக்கிறார் நகரமயமாக்கல், இடம் பெயர்தல், தொழில்ரீதியான இடமாறுதல்களால் அவரை விட்டு நாம் தான் வெகு தொலைவில் வந்து விட்டதால் நாம் அவரிடம் செல்வதில்லை. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் கார்பரேட் மருத்துவ மனைகள் சாதாரண சளி காய்ச்சலுக்கும் குறைந்தது இரண்டாயிரம் செலவு நம் தலையில் ஏற்றாமல் விட மாட்டார்கள்.

ஏன் குடும்ப நல மருத்துவர் இங்கே நமக்கு அதி முக்கிய தேவை என்றால் அவருக்கு நம் சந்ததி நம் நண்பர்கள் நம் அம்மா அப்பாவின் உடல் நலம் உடல் அமைப்பு பற்றி பொதுவான ஒரு புரிதல் இருக்கும். இது உண்மையில் நம் உடல் நலனுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சொல்லப்போனால் நம்மை அரண் போல் இருந்து இந்த கார்பரேட் மருத்துவர்களிடமிருந்தும், மருத்துவ மனைகளிருந்தும் காப்பற்றி நம் பணத்தையும் பாதுகாத்து உடல் நலனும் பாதிக்காமல் தேவையற்ற மாத்திரைகள் உட்கொள்வதை தடுக்கவும் செய்கிறார். சிறிய வலியின் தேவையிருப்பின் அதற்கு மருத்துவம் இல்லை என்றால் பேசியே குணப்படுத்தியும், தைரியம் தந்து வலி காரணத்தை புரிய வைத்து அனுப்பி விடுவார்.

அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன வலிகளின் உண்மையை புரிந்து கொள்வது அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை பாதிக்கப்பட்டவருக்கு விளக்க முயலும் பொழுதே வலியின் தீவிரம் சுமார் 50% குறைந்து போய்விடும் என்று நவீன மருத்துவ ஆய்வுகள் நிருப்பிக்க துவங்கி விட்டன. இதனை ஆங்கிலத்தில் HEALTH EDUCATION அதவாது உடல் நலக் கல்வி என்கிறோம். இதனையும் நம் முன்னேர்கள் உணர்ந்தே பள்ளியில் ஒரு பாடமாக வைத்து இருந்தோம். ஆனால் பள்ளி குழந்தைகளுக்கு நாம் திணிக்கம் அறிவு அதிகமாக இருக்க வேண்டும் என்பதால் உடல் நல கல்வி பற்றி பாடமே அதற்கான தேவைகளை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டோம். எவ்வளவு பள்ளிகள் விளையாட்டு மைதானத்தோடு கட்டமைக்கபட்டுள்ளன என்றால் கேள்வியே மிஞ்சி இருக்கும். உடல் வலுவின் தன்மை நம் வலியை தாங்கும் சக்தியை தருகிறது என்றால் அதை நாம் ஏன் கட்டமைத்து கொள்வதில்லை? என்னிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ள வரும் 60 சதவிகித நண்பர்கள் பெரும்பாலும் சிறு பயற்சி கூட செய்யாதவர்கள், ஏன் என்றால் எங்க சார் நேரமிருக்கிறது என்ற பதில் உடனடியாக வந்து விழும்.

இருப்பினும் சிறு வலியின் தீவிரம் உங்கள் மூளை உணர்வது உங்கள் உங்கள் தாங்கிக்கொள்ளும் சக்தியை பொருத்து மாறுபடும். இதனை ஆங்கிலத்தில் TOLERANCE CAPACITY என்பார்கள். இதை வலுப்படுத்தி கொள்ள மிக முக்கிய ஒரே மருந்து உடற்பயிற்சியேயாகும். பெரிய அல்லது தீவிர வலியையும் தாங்கிக் கொள்ளும் பேராற்றலை நம் உடலுக்கு வழங்கிட நாம் உடலை வருத்தி செய்யும் சிறு உடற்பயிற்சிகள் உதவியாக இருக்கும். உடலை வளைக்கும் எந்த ஒரு உடற்பயிற்சிகளுக்கும் நாம் கொடுக்கும் சக்தியின் தேவையை பொருத்து அந்த உடற்பயிற்சியின் தீவிரம் மாறுபடும். வலியின் புரிதல் எவ்வாறு முக்கியமோ அதனை தாங்கிக்கொள்ளும் சக்தியும் மிக முக்கியம். வலி என்பது நம் உடல் நம் மூளைக்கு சொல்லும் செய்தியாகும். உடலின் பல்வேறு பகுதிகளை இயக்க செய்யும் மூளை திடீரென நம் உடல் பகுதிகள் எங்கோ பாதிப்புக்குள்ளாகும் போது மூளைக்கு தெரியப்படுத்தி அதை நாம் அறிந்து மருத்துவம் செய்வதா வேண்டாமா இல்லை அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் பாதிக்க படும் பகுதி மீண்டும் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்க உதவுகிறது. அதனால் வலியை அறிந்த பின் எதனால் வருகிறது எப்பொழுது வருகிறது என்று நம்மை ஆய்வு செய்து கொள்ளும் போதே பெரும்பாலான வலிகளுக்கு நமக்கு மருத்துவம் கிடைத்து விடும். உதாரணமாக சார் ரொம்ப எங்க ஆபீஸ் இருக்கையில் அமர்ந்து வேலை செய்தால் முதுகு வலி வருது சார். மற்ற நேரங்களில் எனக்கு எந்த வலியும் இல்லை என்றால் என்று ஒருவர் கூறுகிறார் என்றால், உங்களுக்கே புரிந்து இருக்கும் அவரின் அலுவல நாற்காலியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது மற்றும் ஒரு காரணம் தொடர்ந்து உட்காருதல். இது போன்று பல்வேறு பிரச்சனைகளை நாமே கண்டறிந்து சரி செய்து கொள்வதில் பாதி உடம்பு வலிகளுக்கு நாமே தீர்வை கண்டறிந்து விடலாம். நாமே நமக்கு மருத்துவர் என்ற இந்த பதிவு எல்லா வலிகளுக்கும் பொருந்தி வராது என்பது முற்றிலும் நாம் ஏற்று கொள்ள வேண்டிய உண்மை. ஏனென்றால்  முன் கூறியது போல் நாள்பட்ட வலிகளுக்கு மருத்துவரை நாடுவதே சாலச்சிறந்தது.   

T. செந்தில்குமார்,

கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181, 8344486421

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com