14. தோள்பட்டை வலியும் சர்க்கரை வியாதியும்

இரண்டு எலும்புகள் இணையும் இடத்தை மூட்டுகள் என்போம். சில எலும்புகள் இணையும்
14. தோள்பட்டை வலியும் சர்க்கரை வியாதியும்

இரண்டு எலும்புகள் இணையும் இடத்தை மூட்டுகள் என்போம். சில எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதி அதிக வலுவுடன் இருக்குமாறு வடிமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வடிவமைப்பை தாங்கி பிடித்து கொண்டிருக்க கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு பகுதியை காப்ஸ்யூல் என்று கூறுவோம். காப்ஸ்யூல் என்ற பகுதி எலும்புகள் இணையும் இடத்தில் அதனை சுற்றி திசு காகிதம் போன்று இறுகப் பற்றி கொண்டிருக்கும். நாம் மூட்டுக்களை இயக்கும் போது இந்த திசு போன்ற பகுதி தனது இயல்பு நிலையில் இருக்கும் லகுதன்மையின் உதவியால் மூட்டுக்களை இயக்க உதவுவதோடு தேவையற்ற அதிர்வுகள் இயக்கங்களை கட்டுப்படுத்தும். இதனை ஆங்கிலத்தில் ஸ்டெபிலிட்டி (Stability) என்பார்கள்.

பொதுவாக தோள்பட்டை சார்ந்த பிரச்சனைகள் 3 லிருந்து 5 சதவிகித மக்களை பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பு ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பான்மையான தோள்பட்டை சார்ந்த வலிகள் 50 லிருந்து 60 வயதிற்கு உட்பட்டோரை அதிகம் தாக்குவதாக மற்றொரு கணக்கெடுப்பு ஆய்வுகள் கூறுகிறது. அதிகம் பெண்களையே பாதிப்பது என்பது கூடுதல் தகவல்.

சில ஆய்வுகள் கூறும் தகவல்கள் உண்மை என்றாலும், தோள்பட்டை காயங்களை பற்றிய விளக்கங்களை மற்றொரு தொடரில் விளக்கி கூறுகிறேன். பொதுவாக அனைவரையும் பாரபட்சமில்லாமல் தாக்கும் ஒரு தோள்பட்டை வலி பெரி ஆர்த்ரைடிஸ் (peri arthritis shoulder) என்பார்கள் மருத்துவர்கள். சிலர் இதனை frozen shoulder என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருத்துவர்கள் உங்களுக்கு வந்திருப்பது frozen shoulder என்பார்கள், எதோ புது வியாதி நம்மை ஆட்கொண்டு விட்டது இனிமேல் தோள் பட்டைவலியோடு வாழ வேண்டியாது தான் என்று பயம் கொள்ளவேண்டாம். கடுமையான தோள்பட்டை வலியை உருவாக்கும் peri arthritis shoulder முற்றிலும் குணப்படுத்த கூடியது. தகுந்த நேரத்தில் வலியை கண்டறிந்து மருத்துவம் மற்றும் பிசியோதெரபி மருத்துவம் எடுத்துகொண்டால் வலி மற்றும் மூட்டு இயக்கம் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடையலாம்.

பிசியோதெரபி மருத்துவம் வலி மற்றும் இயக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு பேருதவியாக இருப்பதோடு எந்த பக்கவிளைவுகள் இல்லாமலும் குணமடையலாம். பிசியோதெரபி மருத்துவத்தின் முக்கிய சிறப்பே மருந்து மாத்திரைகள் இல்லாமல் கடுமையான வலிகளை குணப்படுத்துவதே. சில நேரங்களில் எங்கள் மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானவர்கள் அதெல்லாம் சரி மாத்திரை கொடுங்க என்பார்கள். அதிலும் முதியோர்களுக்குப் புரிய வைத்து அனுப்பது சிரமமாக இருக்கும். மாத்திரை மேல் இருக்கும் நம் பற்று அளவிட முடியாதது. முன் கூறியது போல வலி நிவாரணிகள் ஒரு போதும் வலியை மட்டும் குணப்படுத்துவதில்லை கூடவே சிற்சில சிரமங்களை சேர்த்தே கொடுப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் மிக முக்கிய பிரச்சனை வயிறு எரிச்சல், அதனால் வலி நிவாரணம் தரும் மாத்திரைகளை சாப்பிட பின் தருவது ஆங்கில மருத்துவத்தில் முறையாகும்.

ஏன் இந்த தோள்பட்டை வலி வருகிறது?

யாருக்கு வேண்டுமாலும் இந்த தோள்பட்டை வலி வரலாம், காரணம் இன்னும் இந்த மருத்துவ உலகம் அறியவில்லை.

எனக்கு சக்கரை நோய் உள்ளது, என் நண்பருக்கு தோள்பட்டை வலி இருக்கிறது அவருக்கும் சக்கரை நோய் உள்ளது? எனக்கும் வருமா?

ஆம், வரலாம், சக்கரை வியாதி இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரை அளவு சீராக இருக்குமாறு பார்த்து கொண்டால் உங்களை இந்த வலி அணுகாது.

எனக்கு எந்த விபத்தோ சிறு காயங்கள் கூட நேரவில்லை ஆனால் ஏன் இந்த தோள்பட்டை வலி?

ஆம், முன் கூறியது போல யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், சிறு காயங்கள் விபத்துக்கள் ஒரு காரணமாக அமைந்து கடுமையான வலியை தந்து  தோள்பட்டை வலியை உருவாக்கலாம்.

எனக்கு தோள் பட்டையை தூக்கி அசைக்கும் பொழுது சிறு வலி இருக்கிறது? எனக்கு இந்த இந்த peri arthritis shoulder வரலாமா?

இல்லை, வராது, இருப்பினும் மருத்துவரை அணுகி ஆய்வு செய்து கொள்வது சிறப்பு.

எனக்கு வலியே இல்லை ஆனால் தலை வாருதல், கையை உயர்த்தி செய்யும் அன்றாட பணிகள் சிரமாக உள்ளது என்றால்?

நீங்கள் peri arthritis shoulder என்ற வலி சார்ந்த பிரச்சனையின் இரண்டாவது நிலையில் இருக்கிறீர்கள், உடனே மருத்துவரை அணுகி ஒரு x ray எடுத்து உங்களை ஆய்வு செய்து கொள்வது சிறந்தது.

சர்க்கரை நோய்க்கும் தோள்பட்டை வலிக்கும் நேரிடையான தொடர்புகள் உள்ளதா?

இல்லை, இருப்பினும், ரத்தத்தில் கலந்துள்ள அதிக சக்கரை எரிக்கப்படும் போது வேதியல் மாற்ற பொருள்கள் தோளை சுற்றியுள்ள காப்சுள் என்ற பகுதியின் மேல் படுவதால் அந்த திசு போன்ற பகுதி இறுகிப் போவதால் தனது லகு தன்மையை இழக்க போது கடுமையான வலியோடு மூட்டு இயக்கம் பாதிக்கப்படும்.

T. செந்தில்குமார், பிசியோதெரபி மருத்துவர்,

கல்லூரி விரிவுரையாளர்,ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி, சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர். ஃபோன் :8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com