4. கணிப்பொறியும் கழுத்துவலியும்

வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் வளர்ந்த நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும்
4. கணிப்பொறியும் கழுத்துவலியும்

வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் வளர்ந்த நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பது உலகமயமாக்களில் ஒரு எழுதப்படாத சட்டமாகிவிட்ட சூழலில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் கூட கணிப்பொறியின் முன்னமர்ந்து உலகெங்கும் உள்ள தமிழ் கூறும் கணிப்பொறி மக்கள் உழைத்து கொண்டிருக்கிறார்கள். புதியதாக வாங்கிய செல்போனும் புதியதாக வாங்கிய சைக்கிளும் இலகுவாகவும் உபயோகிக்க ஈடுபாடும் அதிகமாக இருக்கும். காலம் செல்லச் செல்ல இலகு குறைந்த ஈடுபாடும் குறைந்து போகும். நம் உடலும் அது போலவே இளமையிலிருந்து மெல்ல விடுபட விடுபட உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் நமது இலகுத் தன்மையை வெகுவாக குறைத்து விடும். கணிப்பொறி முன் பணி புரியும் 81 சதவிகித ஆண்களுக்கு கழுத்து வலி வர வாய்ப்பு இருப்பதாகவும், பெண்களுக்கு 90 % சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மேலே கூறியது போல நம் வயது முதிர்ச்சி அடைய அடைய உடம்பில் பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டேயிருப்பது நாம் அறிந்ததே.

நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டம் ஒரு சராசரி மனிதன் 8 மணி நேரமே உழைக்க வேண்டும் என்றும் அதற்கு மேல் உழைக்கும் மனிதர்களும் அதிக சம்பள ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதாவது அதிகபடியான உழைத்த கால அளவை பொறுத்து ஆனால் இங்கே நடப்பது 12 மணி நேர தொடர் பணி. எனக்கு தெரிந்த சில கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 16 மணி நேரம் மேல் உழைக்கும் நபர்கள். இதற்கு விடிவு இல்லை. விளைவு இளமையிலேயே கழுத்து எலும்புகள் தனது வலுவை இழந்து முதிர்ந்து தனது இயங்கும் தன்மையை இழந்து நோய்வாய்ப்படுவதே. இதனை SPONDYLOSIS எங்கிறது மருத்துவ உலகம். புதுப்புது புரியாத பெயர்களால் மக்களை கலக்கம் அடையச்செய்வதும் அதன் மூலம் மக்களை அச்சப்பட வைப்பதும் அதன் முக்கிய நோக்கமாகும்.

பொதுவாக நரை வெளியே தெரிவது முதிர்வின் அடையாளம், வெளியே தெரியாத அடையாளங்களில் ஒன்று தான் தசைகள் தனது இலகுத் தன்மையை இழந்து போகுதல். இதனை ஆங்கிலத்தில் HYPERMOBILITY என்போம். அதாவது உடம்பில் உள்ள தசையின் இலகுத் தன்மை குறைந்து போய் இயக்கம் குறைந்து போகும். அதாவது மூட்டுகளில் இயக்கம் கொஞ்சம் சிரமபட்டு நடக்க நேரிடும். இதன் விளைவுகள் உடனே தெரியா விட்டாலும் நாட்கள் செல்ல செல்ல தெரிய ஆரம்பிக்கும்.

பெங்களூர் கணிப்பொறி மென்பொருள் கம்பெனிகளின் கோலோட்சிய நகரம் என்பதால் இந்த கட்டுரை எழுதுவது மிகத் தேவையான ஒன்றாகும். என்னிடம் பிசியோதெரபி மருத்துவம் செய்து கொள்ள வரும் 60% நண்பர்களுக்கு கழுத்து வலி முதன் இடத்தை பெரும் என்பதை சொல்லிகொள்வதில் வருத்தமே என்றாலும் கழுத்து வலியின் காரணங்கள் அதன் ஆரம்ப அறிகுறிகள் தொடர் விளைவுகள் பற்றி கற்பித்தல் அவசியமாகிறது. Health Education மற்றும் நோயின் தன்மையை பாதிக்கப்பட்டவர் உணரும்போது அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதாக நவீன ஆய்வுகள் கூறுகிறது. Gadgets என்ற வார்த்தை நம் வாழ்க்கையோடு ஒன்றிபோய்விட்டது, அதோடு மட்டும் இல்லாமல் சிலர் தங்கள் குடும்பங்களையே மறந்து தொடர்ந்து கணிப்பொறி முன் அமர்ந்து இருப்பதும் அருகில் இருக்கும் நபரை கூட தகவல் தொழில்நுட்ப வசதியுடன் தொடர்பு கொள்வதும் நம் உணர்வோடு கலந்துவிட்டது. கணிப்பொறி என்பது நிதர்சனமாகிறது.

அறிவும் அன்பும் இருக்கும் மனித இனம் அன்பை கூட இப்பொழுது மணிகணக்கில் கணிப்பொறி மூலமே அல்லது மொபைல் போன் மூலமாகத்தான் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. அறிவின் அளப்பரிய வளர்ச்சி இந்த சாதனங்களின் இன்றியமையாத தன்மையை நமக்கு திணித்து விட்டது என்றே சொல்லலாம். கழுத்து வலியோடு வரும் கணிப்பொறியாளரை உங்களுக்கு கணிப்பொறியால் தான் கழுத்து வலி வந்தது எனக் கூறி உங்கள் தொழிலை விட்டு விட்டு வேறு பணிக்கு சென்று விடுங்கள் என்றால் அவர் என்னை மேலே கீழே பார்த்து விட்டு அடுத்த நாள் வேறுயொரு பிசியோதெரபி மருத்துவரை மாற்றி விடுவார்.

எங்களின் மருத்துவ தேவை இங்கே அதிகம் தேவைப்பட்ட போதும், மருத்துவர்கள் பரிந்துரைக்க எடுத்துகொள்ளும் காலதாமதம் கழுத்து வலி வந்த நண்பர்களின் வலிகளை இன்னும் அதிகப்படுத்தி விடுகிறது. இதனை புரிந்தே மேலை நாடுகளான லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிக்கப் பட்டவர் எந்த நிலையிலும் இன்னும் அதிகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் கழுத்து வலி வந்தவர் நேரிடையாக பிசியோதெரபி மருத்துவரை காண சட்டத்தை மாற்றியமைத்தும் தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியும் வருகிறது. இந்திய போன்ற நாடுகளில் பிசியோதெரபி மருத்துவம் முதல் நேர்முக பயன்பாட்டில் இல்லையென்றாலும் மக்களிடம் பெருகி வரும் விழிப்புணர்வு, இந்த மருத்துவத்தை வெற்றிகரமாக மக்களுக்கு பயன்படுத்த உதவுகிறது. போராட்டம் நிறைந்த மருத்துவத்துறையில் இந்த மருத்துவ துறையின் பயன்களை மக்களிடம் அதிகம் கொண்டு சொல்ல அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது.

T. செந்தில்குமார் 

கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

 பெங்களூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com