7. சூரிய ஒளியும் வலியும்

கழுத்தை பற்றிய தொடர்ந்து உங்களுக்கு விளக்கி கொண்டு வர முக்கிய காரணம்
7. சூரிய ஒளியும் வலியும்

கழுத்தை பற்றிய தொடர்ந்து உங்களுக்கு விளக்கி கொண்டு வர முக்கிய காரணம், அதிகரித்து வரும் கழுத்து வலி பிரச்சனைகள் தான். மனிதனாகி நாம் எப்போது இரண்டு கால்களில் பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தால் நடக்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து எல்லா உடல் பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பித்தது என்பதே உண்மை. நம் உடலின் அனைத்து எடையும் தாங்கும் முக்கிய மூன்று பகுதிகளான தண்டு வட எலும்புகள், முழங்கால் எலும்புகள் மற்றும் குதிகால் எலும்புகளில் வாழ்க்கை மாற்றமும், வயது முதிரும் போது தொடர் மாற்றம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் எலும்பு தேய்மானம் பல்வேறு எலும்பு சார்ந்த பிரச்சனையை அமைதியாக நமக்குள் நிகழ்த்தி கொண்டிருப்பதை நாம் உணரும் போது நமக்கு சுமார் 45 அல்லது 55 வயதாகிவிடும்.

அலுவலக பணியைத் தொடர்ந்து 8 மணி நேரம் மேலே செய்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த எலும்பு சார்ந்த பிரச்சனைகள் எதிர்காலத்தில் தாக்கும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. சூரிய ஒளியில் நமது உடம்பில் உட்புகாத வண்ணம் அணிந்து கொள்ளும் இறுக்கமான உடைகள் மற்றும் சூரியன் உதிக்கும் முன்பே அலுவலகம் பயணித்து அல்லது மகிழுந்தில் பயணித்து அலுவலகத்தை அடைந்ததும் குளிரூட்டிய அறையில் பணி புரிந்து விட்டு மீண்டும் சூரியன் அஸ்தமனமான பின் உறங்கச் செல்லும் அனைவரையும் இந்த எலும்பு தேய்மானம் தாக்கும் என்பது மருத்துவர்கள் கூறும் உண்மை.

உடலுக்கு தேவையான கால்சியம் சத்து சூரிய ஒளியை விட்டால் வேறு எங்கும் கிடைக்காது அதே வண்ணம் நம் உடல் அமைப்பும் வடிமைக்க பட்டுள்ளது. உணவில் கால்சியம் இருந்தும், இந்த இயற்கை வழியான சூரியனிலிருந்து கிடைக்கும் கால்சியம் உடம்பிலுள்ள எலும்பு மற்றும் பற்களை உறுதியாக வைத்து கொள்ள உதவும் முக்கிய மூலக்கூறு.

சமீபத்தில் சுமார் 20 வயதேயான கல்லூரியில் படிக்கும் பெண்ணுக்கு முதுகு வலி என்று பிசியோதெரபி மருத்துவம் வேண்டும் என்று என்னை நாடினர் அவரின் பெற்றோர். அவரின் மருத்துவ ஆய்வுகளை கண்ட போது அந்தப் பெண்ணின் உடம்பில் முக்கியமாக இருக்கவேண்டிய வைட்டமின் D3 அளவு மிகவும் குறைவாக அதாவது வெறும் 3 அளவே இருந்தது, சுமாராக போதியளவு இருக்க வேண்டியது 20-100 ng/Ml, இதனால் கடுமையான முதுகு வலியால் பாதிக்கபட்ட அவருக்கும் மருத்துவர் கால்சியம் மாத்திரையும் பிசியோதெரபியும் பரிந்துரை செய்து இருந்தார்.

இந்த பெண்ணின் வாழ்க்கை முறை மேற்கூறிய வாழ்க்கை முறையே, அவரின் மருத்துவம் கால்சியம் மாத்திரைகள் அல்ல சூரிய ஒளி தன் உடல் மீது படும்படி தனது வாழ்க்கை முறையில் சிறிது மாற்றம் நிகழ்த்தினார் என்றால் முதுகுவலியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், அவ்வாறே பரிந்துரை செய்தபின், பிசியோதெரபி அறிவுறுத்தும் சில இயக்க உடற்பயிற்சிகள் அளித்தபோது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இப்போது வலியில்லாமல் பேருந்தில் நீண்ட நேரம் பயணம் செய்ய முடிகிறது. இந்த வைட்டமின் D3 சூரிய ஒளியில் இருக்கும் கால்சியத்தை நன்றாக உடலில் கிரகித்துக்கொள்ள உதவுகிறது. நமக்கு நாமே மருத்துவர் என்பதின் இன்னொரு உதாரணம் இந்த நிகழ்வாகும்.  தொடர் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் விளைவு வயதான பின் கழுத்தில் உள்ள எலும்புகள் தனது வலுவை இழப்பதால் கழுத்து பகுதியிலும் கைகளிலும் வலிகள் வருவதை காணலாம்.

தொலைக்காட்சியில் காணும் பல்வேரும் விளம்பரங்கள் உங்களுக்கு கால்சியம் வழங்கும் உணவு மருந்து பைகளை பரிந்துரை செய்தாலும் உடம்பில் சூரிய ஒளி மூலம் பெற்று கொள்ளும் கால்சியம் நம் உடலுக்கு இயற்கையான முறையில் கிடைக்கிறது. வரும் காலங்களில் பெண்கள் அணிந்து கொள்ளும் வளையங்கள் கை உரைகள் எளிதில் சூரிய ஒளியை நம் உடம்பில் ஊடுருவ விடாது. இதன் விளைவு சிறிய வயதிலேயே எலும்பு தேய்மானம், கழுத்து வலி, மூட்டு வலி, முதுகு வலி, பாத வலி பெண்களுக்கு அதிகரித்து வருவதாக முக்கிய ஆய்வுகள் கூறுகின்றன.

கால்சியத்தின் அளவு உடம்பில் குறையும் பொழுது கழுத்து மூட்டு முழங்கால், முதுகு எலும்புகள் தேய்மானம் ஏற்படுவதால் உடம்பின் எடையை தாங்க முடியாத எலும்புகள், அதனை தசைப்பகுதி தாங்கிக் கொள்ளும் பொழுது வலுவில்லாத தசைகள் அழுத்தம் தாங்க முடியாமல் வலியாக நமக்கு தெரிய ஆரம்பிக்கும். வாரத்தில் இறுதி நாட்களில் ஆண்களே உங்கள் சட்டையை அகற்றி விட்டு சூரிய ஒளி படுமாறு சிறிது நேரம் வெயிலில் அமர்வதும், பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு அமர்வதும் எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

- T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com