10. கழுத்து வலியும் கை வலியும்

கழுத்து பகுதியுள்ள குருதெலும்புகள் ஏழும் இணைந்து நம் உடலை தலையோடு இணைப்பதுடன்
10. கழுத்து வலியும் கை வலியும்

கழுத்து பகுதியுள்ள குருதெலும்புகள் ஏழும் இணைந்து நம் உடலை தலையோடு இணைப்பதுடன், நம் பார்வை நோக்கும் திசையை நோக்கி கழுத்தை திருப்பவும், இயக்கவும் உதவுகிறது. இந்த ஏழு எலும்புகளுக்கும் இடையே இருக்கும் மிக முக்கிய பகுதி தண்டு வடமாகும். நம் உடலின் இயக்க கட்டுப்படும் உணர்ச்சிகள் அனைத்தும் தண்டுவடம் மூலம் சிறு சிறு நரம்புகளை கொண்டு இணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இயங்கும் தலை மற்றும் கழுத்து பகுதி இயக்கங்களால் இந்த எலும்புகளுக்கு இடையே ஏற்படும் உராய்வு விசையை தாங்கி பிடித்துக் கொள்ளவும், லகுவாக்கவும் பஞ்சு போன்ற ஒரு ஜெல் அமைப்பு அமைந்துள்ளது, இதனை ஆங்கிலத்தில் டிஸ்க் (DISC) என்று கூறுவார்கள்.

பல்வேறு சமயங்களில் தொடர் இயக்கத்திற்கு உள்ளாகும் போது, ஏழு குருத்தெலும்புகளில் ஏற்படும் மாற்றங்களால் கழுத்து எலும்புகளுக்கு இடையே ஏற்படும் உராய்வு விசையால் எலும்புகள் தனது வலுவை இழந்து உறுதித் தன்மையை இழக்க நேரிடும். அப்போது கழுத்துக்கு இடையே உள்ள இந்த ஜெல் போன்ற பகுதி கசிந்து வெளியே வரலாம்.

வெளியே வந்த ஜெல் போன்ற அமைப்பு கழுத்து தசையைச் சுற்றியுள்ள நரம்பு தாரைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். கழுத்து எலும்புகளின் வலு வயதானவர்களுக்கு குறைந்து போவது என்பது இயல்பான ஒன்று. பல்வேறு சமயங்களில் மருத்துவர்கள் கூறும் எலும்பு தேய்மானம் மிகுந்த பயத்தை கொடுத்தாலும், அது இயல்பான ஒன்றுதான். கழுத்து எலும்புகளின் உட்புகுந்து செல்லும் நரம்புகள் எலும்புத் தேய்மானம் ஏற்படும் போது எலும்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளி குறையும் போது நரம்புகள் அழுத்தப்பட்டு கை மணிக்கட்டு கீழ்ப் பகுதி விரல்கள் என்று வலி கழுத்து பகுதியில் இருந்து கீழ் நோக்கி வரும், இதனை ஆங்கிலத்தில் Radiating (ரேடியேடிங்) என்பார்கள். சிலருக்கு தாங்க முடியாத வலி இருமல் அல்லது தும்மல் வரும் போது, கழுத்து வலியானது  கைக்கும் கை விரல்களுக்கும் பரவி வரும். இது போன்ற தொடர் பிரச்சனைகளுக்கு மருத்துவர் அறுவை சிகிச்சை ஒன்றையே தீர்வு என்பார்.

நாமும் கழுத்து எலும்பு அழுத்தினால் மூளை பாதித்து பக்கவாதம் வந்து விடுமோ என்ற பயத்தில் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்து விடுவோம். என்னிடம் வரும் பெரும்பாலோர் கேட்கும் கேள்வி நரம்பு அழுந்தினால் மூளைச் செயலிழந்து பக்கவாதம் வந்து விடுமா என்றுதான். இதற்கான விடை இல்லை, கழுத்து எலும்புகள் தேய்வதாலோ அல்லது நரம்புகள் அழுத்துவதாலோ மூளைக்கு எந்தவித பாதிப்பும் வராது.

இதுபோன்ற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கும் சமயங்களில் உங்கள் முடிவில் சிக்கல் ஏற்படும் போது, பெரும்பாலானவர்களுக்கு அறுவை சிகிச்சை பயத்தால் வேறு வழி இல்லையா என்று மருத்துவரை வினவும் போது பிசியோதெரபி சிகிக்சை எடுத்து கொள்ளலாமா என்று உங்கள மருத்துவரை கேளுங்கள், இல்லை வேண்டாம் என்றால் உங்கள அருகமையில் உள்ள  குடும்ப நல மருத்துவரை அணுகி விவரத்தை கூறுங்கள். அவர் கண்டிப்பாக உங்களுக்கு வழங்கும் ஆலோசனை பிசியோதெரபி எடுத்து கொள்வது பலன் தரும் என்றாலே பிசியோதெரபி மருத்துவரை அணுகி உங்கள பிரச்னை கூறுங்கள். அவர்கள் கொடுக்கும் பிசியோதெரபி சிகிக்சை முக்கிய வலி நிவாரணியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அறுவை சிகிக்சையைத் தவிர்த்து விடலாம். அதனால் பக்கவாதமோ கை  செயல் இழப்போ ஒன்றும் ஏற்படாது. இருப்பினும் உங்கள்  நரம்புகள் அழுத்தப்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி போன நிலையில் இருக்கும் போது மட்டும் தீராத வலி இரவு உறக்கம் வலியால் தடை படும் போது அறுவை சிகிக்சை செய்து கொள்வதுதான் தீர்வு.

முதலில் கூறியது போல எலும்புத் தேய்மானம் என்பது அனைவருக்கும் ஒன்றல்ல. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். அவரவரி உடல் மாறுபாடுகளுக்கு ஏற்ப இருக்கும், அல்லது சிலருக்கு உறுதியாகவே இறுதி வரை இருக்கும். சிலருக்கு அவர்களை செய்யும் தொழில்ரீதியான செயல்கள் எலும்புகள் சிறு வயதிலே தேய்ந்து போக காரணமாக அமைந்து விடும். உதாரணமாக எழுத்து பணியில் உள்ளவர்கள் கணிப்பொறி பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு சிறுவயதிலே எலும்புகள் தனது வலுவை இழந்து நரம்புகள் அழுந்த நேரலாம் இவர்கள் கண்டிப்பாக பிசியோதெரபி சிகிக்சை மேற்கொண்டால் முழு வலி நிவாரணம் பெறலாம். தவிர மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கழுத்து பயிற்சிகள் செய்து வர அறுவை சிகிக்சை இன்றி வலியை வென்றெடுத்து சிறப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற முடியும்.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com