29. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) பகுதி I

தசைகளின் செயல் திறனை மேலும் மேலும் வலுவாக்கி உறுதியுடன் இருக்கவும் அதன்
29. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) பகுதி I

தசைகளின் செயல் திறனை மேலும் மேலும் வலுவாக்கி உறுதியுடன் இருக்கவும் அதன் மூலம் நம் அழகை மேம்படுத்தி கொள்ளவும் நோய்களின் இருந்து காத்துக் கொள்ளவும் ஜிம் பயற்சிகள் உதவுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். தசைகளின் அடிப்படை கட்டமைப்பை உறுதிபடுத்த நாம் எப்பொழுதும் செய்யும் சில பயற்சிகள் செய்தாலும், சில நேரங்களின் தக்க ஆலோசனைகள் இல்லாமல் செய்யும் பயற்சிகள் தசைகளின் உள்ளே காயங்களை ஏற்படுத்தி வலியை உருவாக்குவதோடு அன்றாட ஜிம் பயற்சிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்தை அளித்துவிடும்.

வாழ்நாள் முழுவதும் இந்த வலி தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்தி மிகுந்த சிரமத்தை தரும். தசைகளின் இயக்கம் அதன் வலுத்தன்மை, டென்ஷன் ஆகியவை மூளை நரம்பின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. உடம்பில் உள்ள தசைகள் அனைத்து ஒருவித டென்ஷனுடனே இயக்கப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் டோன் (TONE) என்பார்கள். அதனால் ஜிம் பயற்சிகளின் போது பயற்சியாளர்கள் டோன் செய்வது என்ற வார்த்தை உபயோகப்படுத்துவார்கள். தசைகளுக்கு உள்ளே உள்ள தசை நார்கள் வலுவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தசையும் எண்ணிலடங்கா தசைநார்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அழகிய முன் கையைப் பெறவும், இறுக்கமான T ஷர்ட் அணிந்து அழகாய் தெரிய உதவும் பைசெப்ஸ் பயற்சியின் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பது பற்றிய ஆலோசனை இதோ:

ஜிம் பயற்சிகள் நம் உடலை மெருகேற்ற உதவுகின்றன. பல பயற்சிகள் தக்க ஆலோசனைகளோ வழிகாட்டுதலோ இல்லாமல் செய்யும் போது தசைகள் தனது வேலையை அதிக இயக்க சக்தியை தாங்கியோ அல்லது புவி ஈர்ப்பு விசையை தாங்கியோ செய்யும்போது சிற்சில காயங்கள் ஏற்படும். இவ்வாறு தசைகளில் ஏற்படும் சிறிய சிறிய காயங்கள் ஒருவரின் தசைகளுக்குள் தேங்கிப்போய் மொத்த தசையின் இயக்கத்தை பாதிக்கும் அல்லது மிகுந்த வலியை உண்டாக்கும். ஒரு சில நேரங்களில் கிழிந்தும் கூட போகலாம்.

பைசெப்ஸ் என்ற தசையை நம் முன்கையில் (ARM) அமைந்துள்ளது. ஒருவரின் வலுவை சோதிக்க கையை மடக்கச் சொல்லி பைசெப்ஸ் எவ்வளவு பெரியதாக உள்ளது என்று பார்ப்பதை நாம் வழக்கமாக கொண்டிருப்போம். இன்று பல்வேறு கருவிகள் வந்து விட்டாலும் அவன் பைசெப்ஸ் பார்ரா எவ்வளோ பெருசு என்று சொல்வது இன்னும் நடைமுறையில் உள்ளது. பைசெப்ஸ் என்பதில் பை என்பது இரண்டையும், செபஸ் என்பது தலையை குறிக்கும். அதாவது இரண்டு தலையை உடைய தசை என்று பொருள்படும்.

பொதுவாக ஜிம் பயற்சிகள் என்றால் எடை தூக்குவது என்றே பொருள் கொள்ளப்படும். ஸ்ட்ரைன் என்றால் காயம்பட்ட தசைகளை குறிக்கும் சொல்லாகும். பைசெப்ஸ் ஸ்ட்ரைன் பொதுவாக எடை தூக்கும் பயற்சிகளின் போது ஏற்படும். மிக அதிகமான எடையை அல்லது பளுவை தூக்கும்போது இந்த தசைகளில் முன்பே கூறியது போல ஸ்ட்ரைன் அல்லது கிழிந்தோ போக நேரிடும். இதனால் கடுமையான வலி, வீக்கம் தசையை சுற்றியும் ஏற்படும். வலியை தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் எடையை தூக்கி செய்யும்போது சிறிய காயங்கள் பெரிதாகி போய்  தசையின் முழு செயல் திறனை பாதிக்க ஆரம்பிக்கும். 

பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குகிற (BICEPS STRAIN) பைசெப்ஸ் ஸ்ட்ரைன் பற்றி சிறிது பார்ப்போம். எடைகளை தூக்குவதில் (WEIGHT LIFT) நாம் காட்டும் அக்கறையோ ஈடுபாடோ எவ்வாறு அதை தூக்க வேண்டும் என்று சிறிது சிந்தித்திருக்க மாட்டோம். DEAD LIFT பயற்சிகளின் போது நம் கையில் உள்ள முன் தசை பைசெப்ஸ் அதி வேகத்துடன் அல்லது அதிக பளுவுடன் இயங்கும் போது இது போன்ற ஸ்ட்ரைன் ஏற்பட மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஜிம் பயற்சிகள் தொடங்கிய உடனே 100 கிலோ எடையை தூக்கி சாதனை செய்ய வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் மிக மெதுவாக நாளுக்கு நாள் எடையை சேர்த்து செய்யும் பயற்சிகள் இது போன்ற ஸ்ட்ரைன் வராமல் தடுக்க உதவுகிறது.

- தொடரும்

தி. செந்தில்குமார், கல்லூரி விரிவுரையாளர்

சாய் பிசயோ கேர் & க்யூர், ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி

பெங்களூர் / Ph - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com