30. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) – பகுதி II

ஜிம் பயிற்சி தொடக்கத்தில் DUMBELL கொண்டு செய்யும் பயற்சிகளுக்கு உங்களை
30. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) – பகுதி II

ஜிம் பயிற்சி தொடக்கத்தில் DUMBELL கொண்டு செய்யும் பயற்சிகளுக்கு உங்களை தயார்படுத்தி கொண்ட பிறகு பைசெப்ஸ் கர்ல் பயற்சிகளை செய்யத் தொடங்குவது சிறந்தது. இதனால் உங்களுக்கு ஏற்பட போகும் பைசெப்ஸ் ஸ்ட்ரைன்யிலிருந்து முழுமையாக தப்ப முடியும். அதோடு உங்கள் ஜிம் பயற்சியும் தடைபடாது.

அதே போல தேவையான அளவு பாதுகாப்பு மற்றும் போதிய சப்போர்ட் உடனும் செய்யும்போது இது போன்ற பின் விளைவுகளை தடுக்கலாம். அதற்கு ஆலோசனை வழங்க பிஸியோதெரபி மருத்துவமனைகள் உங்களுக்கு உதவும். இது போன்ற ஸ்ட்ரைன் ஏற்பட்டவர்களை முறையாக கண்டறிந்து அவர்களுக்கு தக்க சிகிச்சை வழங்கி மீண்டும் ஜிம் பயற்சிகளை தொடர நாங்கள் உதவுகிறோம். எங்களின் முறையான உடற்பயற்சிகள் மற்றும் மருத்துவம் மீண்டும் இது போன்ற ஸ்ட்ரைன் வராமல் தடுத்து உங்கள் பைசெப்ஸ் தசையின் செயல்திறனை வலுவேற்றி அழகான பைசெப்ஸ் பெற உதவும்.  

இந்த வழிகாட்டுதல்களை மிக சீரிய அணுகுமுறை முறையான விளக்கங்களுடன் தர எங்கள் மருத்துவமனை உதவுகிறது. விசைகளை எப்படி கட்டுபடுத்துவது, எவ்வளவு எடைகளை தூக்க வேண்டும் எவ்வாறு தூக்க வேண்டும் என்று இயன்முறை மருத்துவம் காட்டும் வழிமுறைகளோடு உங்களுக்கு சொல்லிதர நாங்கள் காத்திருக்கிறோம். பைசெப்ஸ் கர்ல் செய்வது பற்றிய தெளிவான விளக்கங்கள் தரவும் அதன் வலுவை எப்படி ஸ்ட்ரைன் வராமல் மேம்படுத்துவது என்றும் நாங்கள் தரும் மருத்துவ சார்ந்த ஆலோசனைகள் உங்கள் பயற்சியை எளிமையாக்கி நீங்கள் நினைத்ததை விரைவில் அடைய உதவும்.

இது போன்ற தசைகளில் ஏற்படும் காயங்கள் சரியாக அதிக நாட்கள் ஆகும். அதற்கவே இந்த முன்னெச்சரிக்கை பதிவு. இதனை பெரும்பாலும் 100 சதவிகிதம் தடுக்க உதவும். அதற்கு நாம் செய்ய வேண்டிய முன்னேச்சரிகை நடவடிக்கை.

  • ஜிம் சென்றதும் முதல் நாள் இருக்கும் ஆர்வம் கடைசி வரை நிலைத்திருக்க சிறிய எடைகளை தூக்கி பயற்சி செய்வதிலிருந்து தொடங்கவேண்டும்.
  • முதல் நாள் நான் 50 கிலோ தூக்குகிறேன் பார் என்று சவால் விடுதல் உங்கள் முதுகில் இருக்கும் ஜவ்வை பதம் பார்த்து விடும், வேறென்ன காலம் முழுவதும் முதுகு வலி உங்களுடன் பயணம் செய்யத் தயாராகி விடும்.
  • ஜிம் பயற்சியாளர் அல்லது பிசியோதெரபி படித்த மருத்துவரின் ஆலோசனை கேட்டு பளு தூக்குவதை விவரம் அறிந்து செய்ய பழகுங்கள்.
  • மூச்சை தம் பிடித்து தூக்கும் அளவுக்கு பளுவை உங்கள் உடலில் ஏற்றாதீர்கள்.
  • சரியான பாதுகாப்பு மிகுந்த உபகரணங்கள் கொண்டு பளுவை தூக்கப் பழகுங்கள்.
  • உங்கள் தசை சோர்வு அடைந்ததை உணர்ந்தால் மேலும் மேலும் பளு தூக்க முயலும்போது ஸ்ட்ரைன் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்.
  • இதனை தவர்க்க போதுமான அளவு உங்கள் தசைகளை உடலை வலுவடையச் செய்யும் பயற்சிக்கு தயார் செய்யப் பழகுங்கள்.
  • உங்கள் உடல் சொல்வதை எப்போதும் கேட்டு அல்லது உணர்ந்து பயற்சிகளை செய்வது சிறந்தது.
  • உடலுக்கு கேடு விளைவிக்கும் சிகரெட், குடி போன்றவற்றைத் தவிர்ப்பது மிக நல்லது.
  • ஸ்ட்ரைன் ஏற்படுவதை உணர்ந்தால் தசைகளுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.

தொடரும்...

தி. செந்தில்குமார்

கல்லூரி விரிவுரையாளர்

சாய் பிசயோ கேர் & க்யூர்

ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி

பெங்களூர்

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com