28. உங்கள் தோள்பட்டைகளைப் பாதுகாப்பது எப்படி? – பகுதி II

நமது தோள்பட்டை மூட்டு உடம்பில் உள்ள மிக உறுதியான மூட்டாகும், இதனை
28. உங்கள் தோள்பட்டைகளைப் பாதுகாப்பது எப்படி? – பகுதி II

நமது தோள்பட்டை மூட்டு உடம்பில் உள்ள மிக உறுதியான மூட்டாகும், இதனை பந்து கிண்ண மூட்டு என்று கூறுவார்.  அதாவது ஒரு கிண்ணத்தில் பந்தை போட்டு விளையாடுவது போன்றாகும். இது உடம்பில் உள்ள மற்ற மூட்டுகளை காட்டிலும் அதிக நிலைத்தன்மையுடன் இயங்க உதவுகிறது.

இதனைச் சுற்றியுள்ள முக்கியமான நான்கு தசைகள் தோள்பட்டை மூட்டுக்கு வலு சேர்க்கின்றன.

  1. SUPRASPINATAUS
  2. INFRASPINATAUS
  3. SUBSCAPULARIS
  4. TERES MINOR

இந்த நான்கு தசைகளும் எலும்பு மூட்டு சுற்றிலும் நங்கூரம் போன்று அமைந்து தோள்களை காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. வலுத்தன்மை தரக்கூடிய குறிப்பிட்ட அமைப்பான ROTATOR CUFF மற்றும் முக்கோணத்தை தலைகீழாக கவிழ்த்தது போன்று அமைந்துள்ள DELTOID ஆகியவை மிக முக்கிய தசைகளாகும்.

ஸ்கேப்புல், ஹுமராஸ் மற்றும்  கிளவிக்கில் என்ற இந்த மூன்று எலும்புகளும் இணைந்து தோள்மூட்டை உருவாக்கிறது. காப்ஷுல்(CAPSULE) மற்றும் லிகமென்ட்கள் (LIGAMENT) மேலே குறிப்பிட்ட இந்த மூன்று எலும்புகளையும் தாங்கி பிடித்துக் கொண்டுள்ளன.

BENCH PRESS எனும் உடற்பயிற்சியை  செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை.

BENCH PRESS பயற்சி செய்யும்போது தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பெஞ்ச் பிரஸ் செய்யும்போது தோள்பட்டையில் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்பட்டிருப்பின் மூட்டுக்குள் குத்துவது போன்று வலி தோன்ற ஆரம்பிக்கும்.  இதுவே முதல் கட்ட அறிகுறியாகும்.

அதனைத் தொடர்ந்து பேண்ட் பாக்கெட்யில் கை விடும் பொழுது குத்துவது போன்ற வலியும், தொடர்ந்து தலைக்கு மேல் கை தூக்கும் பொழுது இழுத்து பிடிப்பது போன்றும் அறிகுறிகள் தென்படும்.  இது போன்ற பாதிப்புகள் உணர ஆரம்பித்தால் நீங்கள் செய்யும் பயற்சியை மாற்றியமைப்பது மிக முக்கியம். இந்த அறிகுறிகள் உங்கள் தோள் மூட்டை சுற்றியுள்ள நங்கூரம் போன்ற அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவு என்பதை உணரவும்.

BENCH PRESS உங்கள் புஜங்களை வலுவாக்க செய்யுங்கள், அதே நேரம் தோள்பட்டையில் உள்ள தசைகள் ஒழுங்காக இயங்குவதை நாம் கருத்தில் கொண்டு உடற்பயற்சிகள் செய்ய வேண்டும். நீங்கள் தவறாகச் செய்யும் முறைகளால் மிக அதிக படியான விசையே அல்லது பளுவோ தோள்பட்டையை சுற்றியுள்ள மேலே குறிப்பிட்ட நான்கு முக்கிய தசைகளை இயக்கும் வலுவான தசைகளில் உருவாகும் போது தசைகள் கிழிந்தே அல்லது அடிபட்டு (MUSCLE STRAIN/INJURIES) ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதனை எப்படி தடுப்பது?

இதனை தடுக்கும் வண்ணம் நீங்கள் இந்த பயற்சி செய்யும் பொழுது முதுகுப் பகுதி பெஞ்சின் மீது முழுவதும் படிந்து இருக்க வேண்டும், அதே போல உங்கள் நெஞ்சு பகுதி மேலே ஏறியது போன்று இல்லாமலும் இருத்தல் அவசியம். எடையைத் தூக்கும்போது முச்சை தம் பிடித்து தூக்காமல் முச்சை வெளியே விடுவது தான் சரியான முறையாகும். இது போன்ற சரியான தக்க ஆலோசனைகளை வழங்கி தகுதியான உடல் வலுவை எளிதாக பெற்றிட இம்முறை மருத்துவம் உங்களுக்கு உதவும்.

நீங்கள் இந்த பயற்சியை செய்யும் பொழுது எப்படி உங்கள் உடலமைப்பு இருக்கிறது (POSTURE), எப்படிப்பட்ட பயற்சியை ஒரு தனி நபர் செய்யலாம், எவ்வளவு கால அளவுகளில் எத்தனை முறை செய்யலாம் என்பன போன்ற ஆலோசனைகளை வழங்க நாங்கள் உதவுகிறோம். வாருங்கள் வழிகாட்ட தயாராய் இருக்கிறோம்.

தொடரும்

தி. செந்தில்குமார்,கல்லூரி விரிவுரையாளர்

சாய் பிசயோ கேர் & க்யூர்

ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி, பெங்களூர்

அலைபேசி - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com