மருந்து, மாத்திரைகளின் தயவின்றி இயற்கையாக ரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு உபாயம்!

எல்.சிட்ருலின் என்பது ஒருவகையான அமினோ ஆசிட். இந்த ஆசிட், மனித உடலின் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. எல்.சிட்ருலின் மேற்கண்ட உணவுப் பொருட்களில் தேவையான அளவில் இருப்பதால்
மருந்து, மாத்திரைகளின் தயவின்றி இயற்கையாக ரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு உபாயம்!

எந்த விதமான மருந்து, மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளாமல் இயற்கை முறையில் நமது உடலில் ரத்த அழுத்தம் குறைய ஒரு உபாயம் உண்டு. அது என்னவெனில் எல்.சிட்ருலின் நிறைந்த சின்ன வெங்காயம், நாட்டுப்பூண்டு, பீன்ஸ், தர்பூஷணி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் தானாகவே ரத்த அழுத்தம் குறைந்து நார்மலாக வாய்ப்புகள் உண்டாம்.

எல்.சிட்ருலின் என்பது ஒருவகையான அமினோ ஆசிட். இந்த ஆசிட், மனித உடலின் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. எல்.சிட்ருலின் மேற்கண்ட உணவுப் பொருட்களில் தேவையான அளவில் இருப்பதால் அவற்றை உண்ணூம் போது தானாகவே ரத்த அழுத்தம் குறைந்து விரைவில் நார்மலாகிறது. எல்.சிட்ருலின் ரத்தத்தில் இருக்கும் நைட்ரிக் ஆசிட்டின் அளவைக் அதிகரிக்கச் செய்து ரத்த தமனிகளை பாதுகாப்பதால் இயற்கையாக ரத்த அழுத்தம் குறையச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. அயல்நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த உண்மை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

அதனால் உயர் ரத்த அழுத்தத்தால் தினமும் மாத்திரை, மருந்துகள் உண்ண வேண்டிய அவஸ்தையில் இருப்பவர்கள் இனிமேல் தங்களது தினப்படி உணவில் மேற்கண்ட உணவுப் பொருட்களை சேர்த்துக் கொண்டு சில மாதங்கள் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் மூலமாக ரத்த அழுத்த அளவீடுகளில் ஏதாவது வித்யாசம் இருந்தால் இது நல்ல இயற்கையான உபாயம் தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com