இன்றைய மருத்துவ சிந்தனை: புளியாரைக் கீரை

இன்றைய மருத்துவ சிந்தனை: புளியாரைக் கீரை

ஜீரண சக்தி அதிகரிக்கும்

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


புளியாரைக் கீரை:

  • புளியாரைக் கீரைச் சாற்றில் ஒமத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
     
  • புளியாரைக் கீரைச் சாற்றில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
     
  • புளியிரைக் கீரைச் சாறு எடுத்து , அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி , வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
     
  • புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்தளிர் , மிளகு (4) , மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகி , நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
     
  • புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப் புண் , வயிற்றுப் புண் குணமாகும்.
     
  • புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.
     
  • புளியாரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
     

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com