இன்றைய மருத்துவ சிந்தனை: பொன்னாவரைக் கீரை

ஹிஸ்டிரியா போன்ற மன நலப் பாதிப்புகளிலிருந்து  முற்றிலும் குணமாகும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: பொன்னாவரைக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பொன்னாவரைக் கீரை:

  • பொன்னாவரைக் கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து தண்ணீரில் (200 மில்லி)  போட்டு மூன்றில் ஒரு பங்கு அளவுக்குச் சுண்டும் வரை நன்றாகக் காய்ச்சி அவற்றை ஆறவைத்து தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் ஹிஸ்டிரியா போன்ற மன நலப் பாதிப்புகளிலிருந்து  முற்றிலும் குணமாகும்.
  • பொன்னாவரைக்   கீரையின் விதையை நன்றாக அரைத்துச் சாப்பிட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் அசதி மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • பொன்னாவரைக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால்  , உடலில் அதிக வியர்வை உண்டாகும். மேலும் மலம் மற்றும் சிறுநீர் வழியாக உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறி உடல் பருமன் குறையும்.
  • பொன்னாவரை இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்துவந்தால் சொரி , சிரங்கு போன்ற தோல் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
  • சர்க்கரை நோயிலிருந்து விடுபட

-------------------------------------
சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.

பொன்னாவாரை பூ(10 கிராம் ),
மிளகு (5), திப்பிலி (3) , சுக்கு(1துண்டு)
சிற்றரத்தை (1துண்டு)


இவை அனைத்தையும்  இடித்து பொடியாக்கி 100 மில்லி நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மதமதப்பு ,  உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com