இன்றைய மருத்துவ சிந்தனை: திருநீற்றுப் பச்சிலை

ஒற்றைத் தலைவலி குணமாகும்
இன்றைய மருத்துவ சிந்தனை: திருநீற்றுப் பச்சிலை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


திருநீற்றுப் பச்சிலை:

  • திருநீற்றுப் பச்சிலை , கற்பூரம் , கஸ்தூரி மஞ்சள் , ஒமம்  இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால்  தலை வலி , தலை பாரம் , காய்ச்சல் போன்றவை குணமாகும்.
  • திருநீற்றுப் பச்சிலையின் வேரை (அரை கிராம்) அளவுக்கு எடுத்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டு வந்தால்  நரம்புச் சம்பந்தப்பட்ட  நோய்கள் குணமாகும்.
  • திருநீற்றுப் பச்சிலைச் சாறு  (100 மில்லி) , நல்லெண்ணெய்.  (1 லிட்டர்) இவை இரண்டையும் கலந்து தைல பதமாகக் காய்ச்சி இறக்கி , தினமும் தலையில் தேய்த்துக் குளித்து , உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
  • திருநீற்றுப்  பச்சிலையைக் கல் உப்பு சேர்த்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். அந்தச் சாற்றை மூக்கில் சில துளிகளைத் தினமும் விட்டுக்கொண்டால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
  • திருநீற்றுப் பச்சிலையை  நன்றாகக்  கழுவி சுத்தம் செய்து , அம்மியில் வைத்து நன்றாக அரைத்து சிறு உருண்டையாகச் செய்து வைத்துக்கொண்டு பிரசவ காலத்தில் சாப்பிட்டு வந்தால்  சுகப்பிரசவம் ஆகும்.
  • திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில்  சீரகம் , சோம்பு  இவை இரண்டையும் சம அளவு
  • (20 கிராம்)  எடுத்து ஊறவைத்து , காயவைத்துப் பொடி செய்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள விஷக் கழிவுகள் அழியும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com