இன்றைய மருத்துவ சிந்தனை: தான்றிக்காய்

இரத்த மூலம் குணமாக
இன்றைய மருத்துவ சிந்தனை: தான்றிக்காய்

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


தான்றிக்காய்:

  • சளி , இருமல் , இரைப்பு நீங்க தான்றிக்காய் , திப்பிலி , முந்திரிப் பருப்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தேனில் இரண்டு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டுவந்தால்  சளி , இருமல் , வறட்டு இருமல் , இரைப்பு போன்றவை குணமாகும்.
  • உள்மூலம் , இரத்த மூலம் , வெளி மூலம்  குணமாக தான்றிக்காய் , தேற்றான் கொட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துப் பொடிசெய்து கொள்ளவும் இதில்  ஐந்து கிராம் அளவு பொடியை , தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , வெளி மூலம் , ரத்த மூலம்  போன்றவை குணமாகும்.
  • பல் பிரச்சனைகள் நீங்க தான்றிக்காயைச் சுட்டுப் பொடியாக்கி , அதில் பல் துலக்கி வந்தால் பல் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
  • ஆஸ்துமா , மூச்சிரைப்பு குணமாக தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை  தலா (100 கிராம்) எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் 10 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நான்கில் ஒரு பாகமாய் சுண்ட வைத்து கசாயத்தை வடிகட்டி காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. அளவில் சாப்பிட்டு வந்தால்  ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு ஆகியவை எளிதில் குணமாகும்.
  • இரத்த மூலம் குணமாக தான்றிக்காய் தோலை வறுத்து பொடித்து தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை என இருவேளை இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு  வந்தால் இரத்த மூலம் நிற்கும்.
  • தொண்டைக் கட்டு ,  மேல் மூச்சு நீங்க தான்றிக்காய்  இளம் தளிரை இடித்து சாறு பிழிந்து 20 மி.லி. அளவுக்கு காலை , பகல் ,மாலை என மூன்று வேளையும் குடித்து வந்தால் தொண்டைக்கட்டு, கோழை கட்டல், மேல் மூச்சு வாங்கல்  போன்றவை குணமாகும்.
  • முடி உதிர்தல் நீங்க திரிபலா பொடியை  (2 ஸ்பூன்) அளவு எடுத்து இரவில் சுடு தண்ணீரில்  ஊறவைத்து காலையில்  அதனுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்துவந்தால் முடி உதிர்வது நிற்கும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com