இன்றைய மருத்துவ சிந்தனை: கோதுமை

முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்திலுள்ள மாசு மறையும்
இன்றைய மருத்துவ சிந்தனை: கோதுமை


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


கோதுமை:

  • முதுகு வலி , மூட்டு வலி குறைய கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து காலை மாலை என இருவேளையும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் முதுகு வலி , மூட்டு வலி குணமாகும்.
  • புளித்த ஏப்பம் உடனடி மறைய கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்து வந்தால் வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் உடனே நிவாரணம் கிடைக்கும்.
  • அக்கிப்புண் , தோல் எரிச்சல் குறைய கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசி வந்தாலும் எரிச்சல் உடனே தணியும்.
  • கபம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கோதுமையை முதல் நாளே நீரில் ஊற வைத்து பின்பு காலையில் அவற்றை மிக்ஸியில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.
  • வியர்க்குரு  மறைய கோதுமை மாவை புளித்த காடி (Vinegar) நீரில் கலந்து வியர்க்குரு மீது பூசிவந்தால் அவை விரைவில் மறையும்.
  • முகச்சுருக்கம் , கரும்புள்ளி நீங்க கோதுமை மாவுடன் பச்சைப் பயறு மாவும் தயிரும் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்திலுள்ள மாசு மறையும்.



KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com