மருந்தாகும் எளிய உணவுப் பொருட்கள்!

30 விநாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக் கொண்டால் விக்கல்
மருந்தாகும் எளிய உணவுப் பொருட்கள்!

2 தேக்கரண்டி சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிக்கட்டி, அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறையும்.

சிறிது தயிரில் 1 தேக்கரண்டி சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

அரை தேக்கரண்டி சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளன. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புகளால் அதிகரித்த தொப்பையையும் குறைக்கலாம்.

செரிமானத்தை சீர்படுத்தி, வாய்வு தொல்லையை நீக்கும் ஆற்றல் சீரகத்திற்கு உண்டு.

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தலையில் தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிர்தல் நின்று நன்கு வளரும். அத்துடன் உடலும் குளிர்ச்சியாகும்.

செம்பருத்திப் பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

முட்டை வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சியக்காய் கொண்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோன்று தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்றுவிடும் அதுமட்டும் அல்ல முடக்கத்தான் கீரைக்கு நரை விழுவதைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு.

ஒரு தேக்கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு சுவைத்தால் விக்கல் நின்று போகும். 30 விநாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக் கொண்டால் விக்கல் நின்று போகும்.

அடிக்கடி கொட்டாவி வந்தால். நான்கு அல்லது ஐந்து தடவை நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவி போய்விடும்.

-பொ.பாலாஜிகணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com