இன்றைய மருத்துவ சிந்தனை காசினிக் கீரை 

காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல்
இன்றைய மருத்துவ சிந்தனை காசினிக் கீரை 

காசினிக்கீரை - பெயரே புதுசா இருக்கா? இக்கீரைக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை அவசியமாகும். மலைப்பிரதேசம்,குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.மேலும் நல்ல குளிர்ச்சியான தோப்புப் பகுதிகளிலும் இக்கீரையை பயிரிடலாம்.காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் 'சிக்கோரியம் இன்டிபஸ்' [Chicorium intybus] என்பதாகும்.என்ன கண்டுபிடிச்சாச்சா?காபி பொடியில் கலப்போமே சிக்கரி,இச்செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

காசினிக் கீரையைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றை உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் கணையக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.

காசினிக் கீரையுடன் சிறிது பார்லி, மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர் கோர்த்துக் கொண்டதால் ஏற்படும்  வீக்கம் கரையும்.

காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com