இன்றைய மருத்துவ சிந்தனை: மருதாணி

இளநரை நீங்கும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: மருதாணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

மருதாணி:

  • மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல் , படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
  • மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்) , பசும்பால் (2லிட்டர்) , மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
  • மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து ,இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
  • மருதாணிப் பூக்களைப் பறித்து ,தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
  • மருதாணிச்  செடியின் பட்டைகளை ஊறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
  • மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com