இன்றைய மருத்துவ சிந்தனை: முசுமுசுக்கைக் கீரை

வாந்தி நிற்கும்
இன்றைய மருத்துவ சிந்தனை: முசுமுசுக்கைக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

முசுமுசுக்கைக் கீரை:

  • முசுமுசுக்கைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
     
  • முசுமுசுக்கைசக் கீரைச் சாற்றில் பறங்கிப்பட்டையை ஊற வைத்து உலர்த்தி, பாலில் வேகவைத்து மீண்டும் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும் . இதில் தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.
     
  • முசுமுசுக்கைக் கீரைச் சாற்றில் ,உலர்ந்த திராட்சயை அரைத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
     
  • முசுமுசுக்கீரை (5 இலை), மிளகு(5) இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் சளி , கபம் குணமாகும்.
     
  • முசுமுசுக்கைக் கீரைச் சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , மூன்று சிட்டிகை அளவுப் பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
     
  • முசுமுசுக்கைக் கீரை , வெங்காயம் இரண்டையும் நெய் சேர்த்து வதக்கி பகல் உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா , மூச்சுத்திணறல் போன்றவை குணமாகும்.
     


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com