தித்திக்கும் தேன்: சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும்!!

தேனுடன் தண்ணீர் சேத்து கலந்து தினமும் பருகுவது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளை வழங்கவல்லது. இந்தக் கலவை உடலில் உள்ள நச்சுகளை நீக்கக்கூடியது. 
தித்திக்கும் தேன்: சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும்!!

பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் கெடாமல் இருக்கக் கூடிய உணவுப் பொருட்களுள் தேனும் ஒன்று. தேன் உட்கொள்வது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றி அமையாத ஒன்றாகும். தேன் கெட்டுப்போகாமல் இருப்பதுபோல் அதை உட்கொள்பவரின் உடலின் ஆரோக்கியமும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும். 

தேனுடன் தண்ணீர் சேத்து கலந்து தினமும் பருகுவது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளை வழங்கவல்லது. இந்தக் கலவை உடலில் உள்ள நச்சுகளை நீக்கக்கூடியது. 

உட்கொள்ளும் முறை:

  1. ஒரு குவளை நீரில் 1 தேக்கரண்டி தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
     
  2. இந்தக் கலவையை மறுநாள் காலைவரை பதப்படுத்தும் வகையில் எடுத்து வைத்து, அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.


நச்சுத்தன்மையை வெளியேற்றும்:

தேனில் நீரைச் சேர்த்து பருகுவது தேங்கியுள்ள நச்சுத்தன்மையினை உடலில் இருந்து வெளியேற்றி, இவற்றால் ஏற்படக்கூடிய பேராபத்தில் இருந்து நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். காலை உணவு உண்பதற்கு முன்  காலியான வயிற்றில் தேனை உட்கொள்வதால் அது வயிற்றை நன்கு சுத்தம் செய்து, இனிமேல் உண்ணப் போகும் உணவில் இருக்கும் சத்துக்களை முழுமையாக உட்கொள்ளும் வகையில் உடலையும் தயார் செய்துவிடும். 

நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும்:

தேன் மற்றும் நீர் கலவை ஆண்டி பாக்டீரியல் கூறாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம்  பல நோய்களை குணமாக்கக் கூடியது. உடலைத் தூய்மை படுத்துவதன் மூலம் வைரஸ், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடி உடல் நலத்தைச் சீர் செய்யும்.

எடையைக் குறைக்கும்:

தண்ணீரில் தேனை கலந்து குடிப்பது என்றவுடன் பலரது நினைவிற்கு வருவது என்னவோ, உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு நல்ல வழி என்பதே. தேனில் சர்க்கரையை விட அதிகமாக கலோரி இருந்தாலும், தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கி உட்கொண்டால் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் கொழுப்புகள் கரையும். இதனால் எடை குறைப்பிற்கு ஒரு சிறந்த வழி இந்தக் கலவை என்பதி துளியும் சந்தேகம் வேண்டாம்.

சக்தியைப் பெருக்கும்:

தினமும் இதைக் குடிப்பதால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நமது ஆற்றலை மேம்படுத்தும். மேலும் இது உடலின் நீர் சக்தியை அதிகரிப்பதன் மூலம் ரத்த ஓட்டம் ஆகியன சீர் செய்யப்பட்டு, உடலின் வலிமையையும் சக்தியையும் இது கூட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com