இன்றைய மருத்துவ சிந்தனை - வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டு, மிளகு, பனைவெல்லம் - தலா இரண்டு கிராம் எடுத்து அரைத்து
இன்றைய மருத்துவ சிந்தனை - வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டு, மிளகு, பனைவெல்லம் - தலா இரண்டு கிராம் எடுத்து அரைத்து சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் தீரும்.

வெள்ளைப்பூண்டு (2 பல்), மிளகு (4), கரிசாலங்கண்ணி (சிறிதளவு) - மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பெரு வயிறு ஒரே மாதத்தில் கரையும்.

வெள்ளைப்பூண்டு (3 பல்), கடுகு (கால் ஸ்பூன்), இரண்டையும் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி , அதை நெஞ்சுப் பகுதியில் தேய்த்தால் மார்புச் சளி கரையும்.

நல்லெண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதில் இரண்டு சொட்டுகளைக் காதில் விட்டால், காது வலி , காது மாந்தம், காது இரைச்சல் போன்றவை தீரும்.

பூண்டு (2 பல்), ஒமம் (கால் ஸ்பூன்), மிளகு (5) இவை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புழு சாகும். கொழுப்பு கரையும், உடல் பருமன் குறையும்.

பூண்டு லேகியம்

தேவையானவை :

பூண்டு லேகியம் புத்துணர்வு தரும் லேகியங்களில் ஒன்றாகும். பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடும். மலச்சிக்கல் நீங்கும். இடுப்பு வலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து.

தேவையான பொருட்கள்

உரித்த மலைப்பூண்டு உரித்தது - 400 கிராம்
பசும்பால் - ஒரு லிட்டர்
பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம் - 400 கிராம்
பசும் வெண்ணை - 300 கிராம்

உரித்த மலைப் பூண்டு எடுத்து, அதைச் சுத்தமாக்கி பசும்பாலில் போட்டு வேகவைத்து அதில் பனை வெல்லம் சேர்த்து இத்துடன் பசும் வெண்ணையை சேர்த்து காய்ச்சி பதமாக்கிய பிறகு, லேகிய பதம் வந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த லேகியத்தை காலை மாலை என இருவேளை தலா 5 கிராம் வீதம் சாப்பிட்டு வரவும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com