சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் ஐந்து உணவுகள்!

சர்க்கரை வியாதி என்று ஒருகாலத்தில் பயந்து நடுங்கும் நிலை மறைந்து இப்போது
சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் ஐந்து உணவுகள்!

சர்க்கரை வியாதி என்று ஒருகாலத்தில் பயந்து நடுங்கும் நிலை மறைந்து இப்போது அனேகருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அதற்கான சிறப்பு மருந்துக்களும் உணவுப் பழக்கத்தின் மூலமே அதை கட்டுப்படுத்தும் நிலையையும் அறிந்து கொண்டோம். எந்த நோயும் நமக்கு வராத வரை பிரச்னையில்லை ஆனால் வந்துவிட்டால் அதை நாம் சமாளித்தாக வேண்டும். அவரச யுகத்தில் உணவு குறித்த விழிப்புணர்வு இன்னும் கூட நம்மில் பெரும்பாலோனர்க்கு இல்லை. என்ன சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற அறிதல் இருந்தால் போதும். உடல் ஆரோக்கியத்தின் முதல் படி அதுவே.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவு இல்லாமல், குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் சர்க்கரை நோய் என்கிறார்கள் மருத்துவர்கள் இதை ஒரு கண்டிஷன் என்று தான் சொல்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது உண்மை. எனவே சரியான உணவுகளை சாப்பிட்டு நீரிழிவு நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சில உணவுப் பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பலன் தரும். 

ஓட்ஸ்

சர்க்கரை வியாதி வந்துவிட்டால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் நல்ல சத்தான உணவினை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். காபி அல்லது டீயை தவிர்த்து தினமும் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து காலையில் குடிக்க வேண்டும். இதில்  நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பெரிதும்  கட்டுப்படுத்த உதவுகிறது.

தக்காளி 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் மற்றுமொரு இயற்கை களஞ்சியம் தக்காளி. நன்கு பழுத்த தக்காளியில் சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து அந்தச் சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது. 
 

க்ரீன் டீ

தினமும் காலையில் க்ரீன் டீ குடித்து வர உடல் புத்துணர்ச்சி அடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். க்ரீன் டீயை ஆரம்பத்திலிருந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதி அருகிலேயே வந்திருக்காது. காரணம் க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்டுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திவிடும்.

ஆப்பிள்

இரவு தூங்கும் முன் தினமும் ஒரு ஆப்பிள்  சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி கட்டுப்பட்டால் இருக்கும். இதயம் சம்பந்தப்பட்ட எவ்வித பிரச்னையும் இன்றி மனம் மற்றும் உடல் நலம் சிறப்பாக இருக்கும். 

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஒமேகா 9 மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துகள் ரத்த நாளங்களை வலிமை அடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் சர்க்கரை நோய் வராமல் கட்டுப்படுத்துகிறது.

இவை தவிர மேலும் சில பழங்களும் காய்கறிகளும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். நமக்கு போய் இந்த வியாதி வந்துவிட்டதே என்று பயந்து இடிந்து போய் உட்கார்ந்துவிடாமல் சத்தான உணவினைத் தேடிப் பிடித்து சாப்பிட்டு வாழ்க்கையை மட்டுமல்ல சர்க்கரையையும் கட்டுக்குள் வைத்திருப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com