கோடை கால குறிப்புகள்!

கோடை கால குறிப்புகள்!

வெயில் காலத்தில் நிறைய ஐஸ்கட்டிகள் தேவைப்படும். ஃப்ரிட்ஜில் உள்ள டிரேயில்
  • கோடை நாட்களில் அதிகமாக காரம் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடவும்.
  • காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் நான்கு டம்ளர் நீர் பருகினால் கோடையில் ஏற்படும் தாகம் தணிவதுடன் உடலும் குளிர்ச்சி பெறும்.
  • கோடைக் காலங்களில் அகலமான மண் சட்டிகளில் தண்ணீரை நிரப்பி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தால் வீட்டினுள் இருக்கும் வெப்பம் தண்ணீரில் பட்டு ஆவியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்கும்.
  • முதல்நாள் இரவே கசகசாவை ஊறவைத்து, மறுநாள் தேங்காய்ப்பாலை விட்டு மைய அரைத்து பேஸ்ட்டாக்கி உடலில் தடவிக் குளித்தால் வியர்க்குரு, அரிப்பு இரண்டும் மட்டுப்படும்.
  • வெயில் காலத்தில் நிறைய ஐஸ்கட்டிகள் தேவைப்படும். ஃப்ரிட்ஜில் உள்ள டிரேயில் வைத்தால் போதாது. சிறுசிறு பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் ஊற்றி டைட்டாக ரப்பர் பேண்ட் போட்டு செங்குத்தாக நிறுத்தி வைத்தால், தண்ணீர் உறைந்தவுடன் அப்படியே பிளாஸ்டிக் பையுடன் எடுக்க சுலபமாக இருக்கும்.
  • கோடைக் காலத்தில் காலையிலேயே மொட்டை மாடி முழுவதும் சணல் கோணிகளைப் போட்டு அதன்மேல் தண்ணீரை ஊற்றிவிடவும். இந்த ஈரம் மதிய நேரம் உச்சி வெயில் வரை வெப்பத்திலிருந்து காப்பாற்றும். அதேபோன்று மாலை 4 மணி அளவிலும் கோணியை நனைத்துவிட்டால் இரவு முழுவதும் வீடு குளு குளுவென்று இருக்கும்.
  • வெய்யில் ஆரம்பித்து விட்டாலே குழந்தைகளுக்கு வேணல் கட்டிகள், வேர்க்குரு என வந்து அவதிப்படுவார்கள். இதற்கு சந்தனத்தை சிறிது பன்னீரில் கலந்து பூசலாம். எரிச்சல், அரிப்பு அடங்கும். இளநுங்கின் உள்ளே இருக்கும் நீரை எடுத்துப் பூசலாம். குழந்தைகள் வெயில் நேரத்தில் வெளியில் அதிகம் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
  • சப்போட்டா பழங்கள் ஐந்து எடுத்து விதை, தோல் நீக்கி தேவையான சர்க்கரை, ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து இரண்டு டம்ளர் சூடு ஆறிய பால் விட்டுப் பருகினால் வெயிலுக்கு இதமாக இருக்கும். 

- கீதா ஹரிஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com