இன்றைய மருத்துவ சிந்தனை: நிலக்கடலை

சர்க்கரை நோய் வராமல் தடுக்க
இன்றைய மருத்துவ சிந்தனை: நிலக்கடலை


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


நிலக்கடலை:

  • பித்தப்பைக் கல் உருவாகாமல் தடுக்க நிலக்கடலையை தினந்தோறும் (30 கிராம்) அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
  • வேர்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெய் வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு  வந்தால் 25% பித்தக்கற்கள் உருவாகும் ஆபத்து குறைக்கிறது
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்க நிலக்கடலையில் மங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கல்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • இளமையாக இருக்க நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
  • ஞாபகசக்தி அதிகரிக்க நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
  • கர்ப்பப்பை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கல்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com