இன்றைய மருத்துவ சிந்தனை: சிறுகண் பீளை

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கும்
இன்றைய மருத்துவ சிந்தனை: சிறுகண் பீளை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

சிறுகண் பீளை:

  • சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால் சிறுநீர் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.
  • சிறுகண் பீளை செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்கள் இந்த உணவை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும்.
    • சிறுகண் பீளை குடிநீர் சிறுகண் பீளை சமுலம் ,சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றை தலா 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அவற்றை 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வந்தால் அனைத்து விதமான சிறுநீரகக் கற்கள் அனைத்தும் கரைந்து விடும்.
  • சிறுபீளை குடிநீருடன்
    முள்ளங்கிக் கிழங்கு (1)
    வெங்காயம் (2)
    சீரகம்(அரை ஸ்பூன்)

    நீர்முள்ளி சமூலம் (ஒருகைப்பிடியளவு) ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து சிறுபீளை குடிநீருடன்  அனைத்தையும் சேர்த்துக் கொதிக்க வைத்துக் தினந்தோறும் காலை மாலை என இருவேளையும் தலா 50 மில்லி அளவு குடித்து வந்தால் சிறுநீர் கற்களை  கரைப்பதில் சிறப்பான பலன் கிடைக்கும்.
  • ஆங்கில வைத்திய முறையில், ‘லித்தோடிரிப்சி’ எனும் சிகிச்சை முறை மூலம் சிறுநீரகக் கற்களைக் கரைப்பார்கள். இச்சிகிச்சை எடுத்துக்கொண்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் கற்கள் உருவாகும். அத்தகைய நோயாளிகள் மூன்று மாதங்கள்  இந்த குடிநீர் குடித்து வந்தால்   மீண்டும் கற்கள் வராது.

குறிப்பு
சிறு கண் பீளை. ‘பூளைப்பூ, ’பொங்கல் பூ’, ‘சிறு பீளை’ எனவும் இது அழைக்கப்படுகிறது.
மழைக்காலம் முடிந்ததும் பரவலாக அனைத்து இடங்களிலும் இச்செடி முளைத்துக் காணப்படும்.
 

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com