இன்றைய மருத்துவ சிந்தனை: வெட்சி பூ  (இட்லி பூ)

மூட்டு வலி , வீக்கம் மறைய
இன்றைய மருத்துவ சிந்தனை: வெட்சி பூ  (இட்லி பூ)

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

வெட்சி பூ  (இட்லி பூ):

வெட்சிப் பூ தேனீர்;

  • வெட்சி பூ ( சிறிதளவு) , நீர் (தேவையான அளவு), பனங்கற்கண்டு (சிறிதளவு) இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் . பின்பு இதனை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவந்தால் காய்ச்சல், உடல் அசதி, சோர்வு ஆகியவை குணமாகும்.
     
  • ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் வெள்ளைப் படுதல் குணமாக

வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் வெள்ளைப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடாய்  பிரச்னை சரியாகும் .

தோல் , எக்ஸிமா பிரச்சனை தீர;

  • வெட்சி பூவை நீர் விடாமல் அரைத்து  (300 கிராம் ) அளவு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் (அரை லிட்டர்) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தைல பதத்திற்கு காய்ச்சி  வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த தைலத்தை தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு  மேலே பூசி வந்தால்  தோல்நோய்கள் குணமாகும்.  எக்ஸிமா என்ற தோல் பிரச்சனைக்கு இந்த தைலம் மிகச்சிறந்தது .தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் பொடுகை போக்கி முடிக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கிறது.

மூட்டு வலி , வீக்கம் மறைய;

  • வெட்சி பூ இலைகளை பசையாக்கி  அடிபட்ட வீக்கம்  உள்ள பகுதியில் பற்றப் போட்டால்  வீக்கம் வற்றிப்போகும்.  மூட்டு வலி மறையும், தசை சிதைவு, நரம்புகளில் சிதைவு, ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு ஆகியவற்றை சரிசெய்யும் அற்புத மருந்தாக இந்த பசை விளங்குகிறது.

குறிப்பு:

சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ.
மரங்களின் தீ பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும் பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்டும்.
குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.
 

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com