இன்றைய மருத்துவ சிந்தனை: பனங்கற்கண்டு

உடல் சோர்வு நீங்க
இன்றைய மருத்துவ சிந்தனை: பனங்கற்கண்டு

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பனங்கற்கண்டு:

  • சளி , இருமல்  நீங்க பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
  • கண் பார்வை அதிகரிக்க சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல், கண்பார்வை திறன் அதிகரிக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் பருப்பு மற்றும் மிளகுத் தூள்(சிறிதளவு) ஆகியவற்றுடன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம்.
  • தொண்டை வலி குணமாக பனங்கற்கண்டு (ஒரு ஸ்பூன்) ,  மிளகுத்தூள் (அரை ஸ்பூன்) , நெய் (அரை ஸ்பூன்) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமாகும்.
  • உடல் சோர்வு நீங்க பனங்கற்கண்டு (சிறிதளவு) , பசு மாட்டு நெய் (அரை டீஸ்பூன்) ,  நிலக்கடலை (சிறிதளவு) ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.
  • தீராத சளி நீங்க பனங்கற்கண்டு (ஒரு ஸ்பூன்) பாதாம் பருப்பு (2) , மிளகுத் தூள் 
  • (அரை டீஸ்பூன்) ஆகியவற்றை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com