இன்றைய மருத்துவ சிந்தனை: நொச்சி

காய்ச்சலுடன் கூடிய சளி நீங்க
இன்றைய மருத்துவ சிந்தனை: நொச்சி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


நொச்சி:

  • வீக்கம் குறைய நொ‌ச்‌சி இலையை இடி‌த்து சாறு பி‌ழி‌ந்து க‌ட்டிக‌ளி‌ன் ‌மீது பூ‌சி வந்தால் க‌ட்டி கரையு‌ம். ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.
  • மூட்டு வலி , மூட்டு வீக்கம் குறைய  நொ‌ச்‌சி இலையை ‌சி‌றிது ஆமண‌க்கு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி ஒ‌த்தட‌ம் கொடுத்து வந்தால் , மூ‌ட்டுவ‌லி, மூ‌ட்டு வீக்கம் குறையும்.
  • கழுத்து வலி  நீங்க நொச்சி இலைச்சாற்றை தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளித்து வந்தால் கழுத்துவலி நீங்கி, காதில் தங்கிய நீரும் வெளியேறும்.
  • இரத்த  பேதி ,வாந்தி குணமாக நொ‌ச்‌சி மல‌ர்களை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து தினமும் இர‌ண்டு ‌ சிட்டிகை அளவு எடுத்து பன‌ங்க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து சா‌ப்‌பிட்டு வந்தால் இர‌த்த பே‌தி, இர‌த்த வா‌ந்‌தி குணமாகு‌ம்.
  • காய்ச்சல் , வயிற்றுப் போக்கு தீர உலர்ந்த நொச்சிப் பூக்களைத் தூள் செய்து  தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சுடுநீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குணமாகும்.
  • காய்ச்சலுடன் கூடிய சளி நீங்க நொச்சி இலையுடன் திப்பிலி சேர்த்து  கஷாயம் செய்து காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் சளியுடன் கூடிய  காய்ச்சலுக்கு  மிகச் சிறந்தது.
  • அல்சர் வயிற்று வலி நீங்க நொ‌ச்‌சி, தழுதாழை, மா‌வில‌ங்க‌ம் ஆ‌கியவ‌ற்றை சம அளவு எடு‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து 250 மில்லி அளவு எடு‌த்து அந்த சாறுடன் 30 கிரா‌ம் பெரு‌ங்காய‌த்தை பொடி‌த்து‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்சவும். அது குழ‌ம்பு பத‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம்  அவற்றை இறக்கி வைத்துக்கொண்டு  தினமும் ஒரு ஸ்பூன் வீத‌ம் தொட‌ர்‌ந்து 10 நா‌ட்க‌ள் சா‌ப்‌பிட்டு வந்தால் கு‌ன்ம‌ம் என‌ப்படு‌ம் அ‌ல்ச‌ர் வ‌யி‌ற்றுவ‌லி குணமாகு‌ம்.

குறிப்பு:
வெள்ளை நொச்சி, நீலநொச்சி கரு நொச்சி என மூன்று வகைகளில் காணப்படும்  இந்த செடி குளம் குட்டைகளின் கரையோரங்களிலும் பாதையோரங்களிலும் பக்கக் கிளைகளுடன் படர்ந்து வளரும் சிறு செடியாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com