தக்காளி கூடத் தருகிறது முகப்பருவுக்கான தீர்வு!

தக்காளி உணவில் சேர்ப்பதால்  ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சருமத்தைப் பராமரிக்கவும்
தக்காளி கூடத் தருகிறது முகப்பருவுக்கான தீர்வு!

தக்காளி உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சருமத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓரிஃப்ளேம் இந்தியாவின் ஆரோக்கிய நல நிபுணர் சோனியா நரங் மற்றும் ஃபிட்பாஸ் நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மெஹர் ராஜ்புட் ஆகிய இருவரும் தக்காளிகளின் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர்:

  • தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச் சத்து, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு சராசரி அளவுடைய தக்காளியில் 22கி.கலோரி, 0 கிராம் கொழுப்பு, 5 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் டயட்டரி ஃபைபர், 1 கிராம் புரதம், 5 கிராம் சோடியம் ஆகியவை உள்ளன. 
  • தக்காளி லைகோபீன் என்று அழைக்கப்படும் ஒரு ஆன்டி ஆக்ஸிடெண்டைக் கொண்டுள்ளது, இது சிவப்பு நிறத்தை அளிப்பதுடன் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. மேலும் இது கண் பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
  • தக்காளியில் ஆல்ஃபா-பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபீன் போன்ற முக்கிய கரோட்டினாய்டுகளின் இருப்பதால் சருமம், முகம், முடி ஆகியவற்றிற்கு போஷாக்கினைத் தரும். இவற்றில், லைகோபீனில் மிக அதிகமாக ஆன்டியாக்ஸிடேட்டிவ் தன்மை உள்ளது, எனவே இது சருமப் பாதுகாப்பிற்கான ஒரு சிறந்த இயற்கையான நிவாரணி என்கிறார்கள். புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படையாமல் தடுக்கும் ஆற்றல் தக்காளிக்கு உள்ளது.
  • வெயில் மற்றும் தூசியால் மாசடைந்து பொலிவிழந்த முகத்தை பளபளப்பாக மாற்ற தக்காளி மிகச் சிறந்த இயற்கையான தீர்வு. உங்கள் சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு தக்காளி துண்டை எடுத்து நன்றாக தேய்த்து  வாருங்கள். விரைவில் பலன் தெரியும்.
  • புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் கறுத்த முகம், சீரற்ற பொலிவிழந்த சருமம் போன்ற சருமம் சம்மந்தமான எவ்வித பிரச்னைக்கும் தீர்வு தக்காளி ஃபேஸ்பேக்கில் உள்ளது. அதை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு தயிரைச் சேர்க்கவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது உங்கள் சருமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரியாக்கி புத்துணர்ச்சியை உணரச் செய்யும்.
  • தக்காளி முகப்பருவை அகற்றுவதற்கான நல்ல நிவாரணமாக விளங்குகிறது.   தக்காளியில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் அமிலத் தன்மை உள்ளதால் அது முகத்தில் இருந்து முகப்பருவைக் குறைக்க உதவுகின்றன. மேற்சொன்ன தக்காளி ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தைக் கழுவவும். தொடர்ந்து இதனைச் செய்தால் உங்கள் முகத்தில் பருக்கள் மெள்ள குறைந்து வருவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
  • உங்கள் உணவில் தினமும் தக்காளி சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கலாம். தக்காளியில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் போதுமான அளவு நீர்ச் சத்தினை தக்க வைக்க உதவுகிறது. 

ஒரு பெரிய தக்காளியில் 431 மி.கி.க்கு பொட்டாஷியம் உள்ளது. இது உடலுக்கு தினசரி தேவைப்படும் கலோரியில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகும்.

தக்காளியில் குறைவான கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அதிகமாகவும், குறைவான கிளைசெமிக்கும் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஆல்ஃபா - லைபோயிக் அமிலம் கணிசமான அளவில் உள்ளது, இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com