வாழைப்பழ சமாசாரமுங்கோ..... 

இப்படி ஒவ்வொரு வகை வாழைப்பழத்திற்கும், தனித்தன்மையான மருத்துவ குணம் உண்டு
 வாழைப்பழ சமாசாரமுங்கோ..... 

இயற்கை நமக்கு அளித்திருக்கும் அற்புதமான உணவு வகைகளில், பழங்கள் பிரதான அம்சமாக விளங்குகின்றன. 

ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு வகையான சிறப்பம்சம் உண்டு.  ஆனால் எல்லா பழங்களும், எல்லா காலங்களிலும் கிடைப்பது இல்லை. அதற்கு விதிவிலக்காக அமைந்து,  எல்லா நாட்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எது என்றால், அது வாழைப்பழம் ஒன்றுதான். 

எல்லா நாட்களிலும் கிடைக்கும் பழமாக இருப்பதால், அதன் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளாமல், பலரும் அப்பழத்தை மலிவாக நினைத்து விடுகிறார்கள். 

  • உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைக்கிறது. 
  • இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிகோலுகிறது. முக்கியமாக, சிலருக்கு, காலில்  ஆடுசதை இழுத்துக்கொண்டு மிகுந்த வலியைக் கொடுக்கும். பொட்டாசியம் குறைபாட்டினால்தான் இம்மாதிரி ஏற்படுகிறது. தினமும் ஒரு பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,  இக்குறையைப் போக்கிக் கொள்ளலாம்.
  • பொட்டாசியம் ஆனது ரத்தக் கொதிப்பை சீராக வைக்கிறது. அதனால் வாழைப்பழம் கண்கண்ட மருந்தாக அமைகிறது. 
  • நரம்பு மண்டலமும்,  தசைகளும் முறையாக இயங்க உதவுகிறது. 
  • இப்பழத்திற்கு அமிலத்தை எதிர்க்கும் சக்தி இருப்பதால், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 
  • இப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், அல்சரிலிருந்து தப்பிக்கலாம்.
  • இதில்,  வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், பற்களும், ஈறுகளும் உறுதியாக இருப்பதுடன்,  நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. 
  • இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் ,  ரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது. 
  • காலைத் தூக்க நோய் உள்ளவர்கள், ஒவ்வொரு உணவு இடைவேளையிலும் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால்,  ரத்தத்தில் உள்ள க்ளூகோஸ் அளவை அதிகரித்து, காலை நேரத்தில், உறக்கத்தைத் தவிர்த்து,  சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது. 
  • இப்பழத்தில் இருக்கும், 'டிரிஃப்டோபேன்'  என்னும் புரதச்சத்து, மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ,  தேவையான அமைதியைக் கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
  • பெண்களுக்கு அதிகமாக வெள்ளைப் போக்கு இருந்தால் ,  இப்பழம் கட்டுப்படுத்தும். 
  • இப்பழத்தில் வைட்டமின் எ,  பி1, பி6 , வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், க்ளூகோஸ், நார்ச்சத்து ஆகியவைகள் காணப்படுவதால், உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கிறது.  

வாழைப்பழங்களில், செவ்வாழை, பூவன், கற்பூரவள்ளி வகைகள் உடல் எடையைக் குறைக்கும். 

மலைப்பழம்,  நேந்திரம்பழம் உடல் எடையைக் கூட்டும். செவ்வாழை,  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். 

பேயன் பழம், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலைக் குளுமையாக வைக்கிறது.

ரஸ்தாளிப்பழம் கண்பார்வைக்கும், இதயத்திற்கும் வலிமையைப் கொடுக்கிறது. 

இப்படி ஒவ்வொரு வகை வாழைப்பழத்திற்கும், தனித்தன்மையான மருத்துவ குணம் உண்டு. 

சர்க்கரை வியாதி மற்றும் வேறு பிணிகளுக்கு மருந்து உண்பவர்கள், மருத்துவரின் அறிவுரையின்படி செயல்படவும்.  

முக்கனிகளில், உலகத்தில்,  எல்லோராலும், எல்லா நாட்களிலும் சாப்பிடக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த அருமையான, சுவையான பழம். 

ஒரு வாழைப்பழத்தில் நூறு கலோரி அளவு சத்து உள்ளது. ஆனால் கொழுப்புச்சத்து கிடையாது. 

முக்கியமாக வாழைப்பழத்தை ஜுஸ் செய்து, அதை உமிழ் நீருடன் சேர்த்து மெதுவாக சிறிது சிறிதாக அருந்த வேண்டும். 

அப்படி அருந்தும் பொழுது, உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறி ,  உடல் உறுப்புக்கள் சுத்தமாகிறது. 

ஏழைகளின் உணவு என்று வழக்கத்தில் கூறப்படும் வாழைப்பழத்தில் கிடைக்கும் மருத்துவப் பயன்களைப் பெற்று, வாழ்வில் வளம் பெறுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com