இன்றைய மருத்துவ சிந்தனை: புங்கை

தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்
இன்றைய மருத்துவ சிந்தனை: புங்கை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


புங்கை:

  • புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடித்து வந்தால் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல்  சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.
  • புங்க எண்ணெய் (100 மில்லி) , 
    பரங்கி பட்டை சூரணம் ( 50கிராம்)  ஆகியவற்றைச் சேர்த்து  தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை சொரியாசிஸ் உள்ளவர்கள் பூசி வந்தால்  சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்.
  • புங்க இலை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  பின்பு வடிகட்டி துணியில் எடுத்து  தலையில் பொடுகினால் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி 10 நிமிடம் கழித்து குளிந்து வந்தால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனடியாக சரியாகும்.
  • புங்க எண்ணெய் (250 மில்லி) , எலுமிச்சை சாறு (100 மில்லி) இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் மூட்டு வலி , கீல் வாதம் , வீக்கம் ஆகியவை சரியாகும்.
  • புங்க விதை பொடி(அரை ஸ்பூன்) அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com