பாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா!!

என்னதான் உடல் எடையை அதிகரிக்கக்கூடிய வெண்ணெய் மற்றும் சீஸ் போன்றவை பாப்கார்னில் இருந்தாலும், மற்ற தின்பண்டங்களுடன் ஒப்பிடுகையில் பாப்கார்ன் உங்களுக்கு ஆரோக்கியமான பல பலன்களைத் தரக்கூடியது.
பாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா!!

திரையரங்கிற்குச் சென்றால் பாடம் துவங்குவதற்கு முன்பே பாப்கார்ன் ஒன்றை வாங்கி அதைக் கொறித்தபடியே முழு படத்தையும் ரசித்துப் பார்ப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப் பதிவை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும். என்னதான் உடல் எடையை அதிகரிக்கக்கூடிய வெண்ணெய் மற்றும் சீஸ் போன்றவை பாப்கார்னில் இருந்தாலும், மற்ற தின்பண்டங்களுடன் ஒப்பிடுகையில் பாப்கார்ன் உங்களுக்கு ஆரோக்கியமான பல பலன்களைத் தரக்கூடியது.

பாப்கார்ன் ஒரு முழு தானியமாகும்:

முழு தானியம் நிறைந்த உணவு என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவோ ரொட்டி மற்றும் ஓட்மீல்ஸ்தான், அல்லது கிண்ணத்தில் கொட்டி பால் கலந்து சாப்பிடும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள். ஆனால் நீங்கள் சாப்பிடும் பாப்கார்னில் 250% அதிகமான ஃபைபர் உள்ளது அதாவது நார் சத்து உள்ளது. இது மற்ற தானிய உணவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம் மற்றும் சுவையானது.

புரதச்சத்து:

நார் சத்து மட்டுமில்லாமல், பாப்கார்னில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. எண்ணெய்யில் பொரிக்கப்படாத, முறுமுறுப்பான தின்பண்டம் பாப்கார்ன் என்பதால், இதய ஆரோக்கியத்திற்கும் இதனால் எந்த பாதிப்பும் வராது. 100 கிராம் பாப்கர்னில் 11 கிராம் புரதச்சத்து உள்ளது. 

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்:

பாப்கார்னில் அதிகமாக இருக்கும் பாலிஃபினால் என்பது டீ மற்றும் பெர்ரி பழங்களில் காணப்படும் ஒன்று. இது புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மையும் நமது இருதயத்தையும் பாதுகாக்கக் கூடியது.

குறைவான கலோரியை கொண்டது:

பாப்கார்ன் என்னதான் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் அது முற்றிலும் காற்றால் நிரம்பியுள்ளது, இதனால் ஃபைபர் மற்றும் புரதச்சத்தை தவிர மிகவும் குறைவான கலோரிகளே பாப்கார்னில் உள்ளது. மூன்று முழு கப் பாப்கார்னில் வெறும் 100 கலோரிஸ் மட்டுமே உள்ளது.

எடையைக் குறைக்கும்:

திரையரங்கில் நீங்கள் சாப்பிடும் சீஸ் பாப்கார்னால் உங்களது எடையைக் குறைக்க முடியாது, சுவையைத் தாண்டி உடல் எடையைக் குறைக்க நீங்கள் பாப்கார்ன் சாப்பிட வேண்டும் என்றால் அது நீங்களே உங்களது வீட்டில் தயாரித்ததாக இருப்பது நல்லது. திரையரங்குகளில் நீங்கள் சாப்பிடும் ஒரு லார்ஜ் பாப்கார்னில் 540 கலோரி உள்ளது, இது மூன்று வேலைச் சாப்பாட்டில் உங்களுக்குக் கிடைக்கும் கொழுப்பு சத்தை ஒரே டப்பாவில் வழங்கக்கூடியது. ஆகையால் வீட்டில் குறைந்த அளவு சீஸ், எண்ணெய், உப்பைக் கொண்டு நீங்கள் தயாரிக்கும் பாப்கார்ன் மிகவும் ஆரோக்கியமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com