வெயிலுக்கு இதமாக ஒரு க்ளாஸ் வெள்ளரி சூப் தயாரித்து சாப்பிடுங்கள்! இதோ ரெசிபி!

இரண்டு வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அவற்றின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெயிலுக்கு இதமாக ஒரு க்ளாஸ் வெள்ளரி சூப் தயாரித்து சாப்பிடுங்கள்! இதோ ரெசிபி!

தேவையானவை :

வெள்ளரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 2 
பால் - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

இரண்டு வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அவற்றின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (விதை பிடிக்காது என்பவர்கள் அதனை நீக்கிவிடலாம், ஆனால் விதையுடன் சாப்பிடுவதான் உடலுக்கு நல்லது)

மீதி பாதி வெள்ளரிகளை மற்றும் உருளைக்கிழங்குகளை தோல் சீவி சேர்த்து நன்கு விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிகவும் திக்காக இருப்பதாகத் தோன்றினால் சிறிதளவு நீர் விட்டுக் கொள்ளலாம்.

வாணலியில் நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெள்ளிக்காயை லேசாக வதக்கவும். பின் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்தபின்னர், அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும். 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். சூப் தயார்.

இதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் உப்பைப் போட்டு நன்றாக கலக்கி சூடாகப் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com