லேகியங்களைவிட இந்தப் பழம் அருமையான மருந்து! தினமும் சாப்பிடுங்கள்!

பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். இது சத்துக்கள், மருத்துவ குணங்கள்
லேகியங்களைவிட இந்தப் பழம் அருமையான மருந்து! தினமும் சாப்பிடுங்கள்!

பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். இது சத்துக்கள், மருத்துவ குணங்கள் நிறைய கொண்ட பழமாகும். பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன். இந்த பழத்திலிருந்து கிடைக்கும் சில பயன்கள்:


பப்பாளிப் பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

இதிலுள்ள வைட்டமின் "ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்தப் பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளபளப்பாக மாறிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com