இளமைத் தோற்றம் வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்!

இறால் மீனில் செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
இளமைத் தோற்றம் வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்!

இறால் மீனில் செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. மேலும் இதில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிகளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும். அதனால் சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் பாதிப்புக்களை நீக்கி இளமையைத் தக்க வைக்க உதவும். தினமும் அல்லது வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர உடல் எடை குறைவதுடன் சருமம் பளபளப்பாகும்.

இறாலில் உள்ள கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான அளவு சக்தியை தருகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்தசோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதிலுள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. இறாலிலுள்ள மக்னீஷியம் சத்து சர்க்கரை நோய் வருவதை தடுக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறாலில் சமைத்த உணவு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. காரணம் இதில் அயோடின் சத்து உள்ளது. இது தவிர ருசிக்காக சாப்பிடும் இறாலில் உடல் நலத்துக்காக அனேக விஷயங்கள் உள்ளது என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

சுவையான இறால் ரெசிபி ஒன்று - பூண்டு இறால்

தேவையான பொருட்கள்: 

இறால் - ½ டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மிளகு - ½ டீஸ்பூன்

முட்டை - ½

மைதா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி காய் - 1 ½ டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தி வைத்துள்ள இறால், மிளகு தூள், உப்பு, முட்டை கரு, மைதா, சோள மாவு இவை அனைத்தும் கலந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் விழுது, தேவையான அளவு தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின், வறுத்து வைத்துள்ள இறால், மிளகுத் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு பரிமாறவும்

சப்பாத்தி, சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுக்குப் இணை உணவாக இது பொருந்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com