இன்றைய மருத்துவ சிந்தனை: சுண்டைக்காய்

ரத்தசோகை குணமாக
இன்றைய மருத்துவ சிந்தனை: சுண்டைக்காய்


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


சுண்டைக்காய்:

  • ஆசனவாய் அரிப்பு  நீங்க சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.
  • தைராய்டு கோளாறுகள் நீங்க சுண்டைக்காய் வற்றல் , சீரகம் , சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.
  • நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க சுண்டைக்காய் வற்றல் , மாதுளை ஒடு இவை  இரண்டையும் சேர்த்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
  • உடல் பருமன் குறைய சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும்  ஐந்து கிராம் பொடியை எடுத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  • ரத்தசோகை குணமாக சுண்டைக்காயை அடிக்கடி சமையலில்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
  • குடல் பூச்சிகள் வெளியேற சுண்டைக்காய் வற்றல் , ஒமம்  இவை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு  தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com