இன்றைய மருத்துவ சிந்தனை: சுக்கு

தலைச்சுற்றல் , தலை வலி வராமல் தடுக்க
இன்றைய மருத்துவ சிந்தனை: சுக்கு


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


சுக்கு:

  • தொண்டைக்கட்டு நீங்க சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டுவந்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.
  • நாவறட்சி குணமாக சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நாவறட்சி குணமாகும்.
  • மூட்டு வலி , வாயுத்தொல்லை நீங்க தோல் நீக்கிய சுக்கை (2 கிராம்) ,  பசும்பாலில் (2 லிட்டர்) போட்டுக் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி , வாயுத் தொல்லை , உடல் அசதி போன்றவை குணமாகும்.
  • பல்வலி குறைய சுக்குத் துண்டை தோல்நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.
  • தலைச்சுற்றல் , தலை வலி வராமல் தடுக்க சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி , தலைச்சுற்றல்  போன்றவை வராது.
  • மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் குணமாக சுக்கு ,  மிளகு , திப்பிலி , அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக்கிக் குடித்து வந்தால்  காய்ச்சல் ,  வாய்ப்புண் , மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் போன்றவை குணமாகும்.
  • வயிற்றுவலி குணமாக சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் கடுமையான வயிற்றுவலி  குணமாகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com